அசத்தலான ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்.!
இந்த லேப்டாப் மாடல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், தண்டர்போல்ட் 3, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜாக் பேன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் ஏசர் நிறுவனம் தனது ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது, இந்த லேப்டாப் மாடல் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிஇஎஸ் 2019 நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு பல்வேறு புதிய கேட்ஜெட்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இப்போது ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டச் டிஸ்பிளே:
93.6மூ ஸ்க்ரீன்-டூ-பாடி என்கிற விகிதத்தை கொண்டுள்ளது ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடல், பின்பு 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிமைப்பு மற்றும் 1920x1080 பிக்சல் தீர்மானம், டச் டிஸ்பிளே, ஐபிஎஸ் டெக்னாலாஜி, பெசல்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லாக கிளாஷ் 6 பாதுகாப்பு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இன்டெல் கோர்
ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் சமீபத்திய 8 வது ஜென் இன்டெல் கோர்i7-8500Y செயலியைக் கொண்டுள்ளது, பின்பு 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ட்ராலைட் மக்னீசியம்:
அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த லேப்டாப்பின் அடிப்பாகத்தில் அல்ட்ராலைட் மக்னீசியம் லித்தியம் கொண்ட உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கீழே விழுந்தாலும் டேமேஜ் ஆகாது. இந்த உலோகம் லேப்டாப்பை முழுவதுமாக பாதுகாக்கின்றது.

பேட்டரி-விலை:
இந்த சாதனம் விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு சிங்கிள் சார்ஜரில் 10மணி நேரம் இந்த ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடலை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் விலை
1லட்சத்திற்கு மேல் உள்ளது.


Click it and Unblock the Notifications