நோட்புக் ஒடிசி: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் லேப்டாப்

இந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்யவுள்ள கேம்ஸ் லேப்டாப். ஒடிசி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் குறித்து CES 2017-ல் அறிவித்துள்ளது.

By Siva
|

கடந்த 2016ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்திற்கு சோதனையான ஆண்டாக முடிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் உலகம் முழுவதும் என்ன பாடுபட்டது என்பது தெரிந்ததே. இதனால் இந்நிறுவனத்தின் பங்கு வர்த்தம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு, பெரிய அளவில் மார்க்கெட்டில் கட்டிக்காத்து வந்த பெயரையும் இழந்தது

நோட்புக் ஒடிசி: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் லேப்டாப்

இந்நிலையில் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் இந்த வருடம் தனது புதிய முயற்சியை தொடங்கி இழந்த பெயரையும் நஷ்டத்தையும் ஈடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படிதான் இந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்யவுள்ள கேம்ஸ் லேப்டாப்.

ஒடிசி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் குறித்து CES 2017-ல் அறிவித்துள்ளது. டைனமிக்ஸ் டிஸ்ப்ளேவுடன் விரைவில் வெளிவரவுள்ள இந்த லேப்டாப்பிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

சாம்சங் நிறுவனம் இதுவரை பல லேப்டாப் மாடல்களை வெளியிட்டிருந்த போதிலும் கேம்ஸ் லேப்டாப்புகள் இதுவரை வெளியிடவில்லை. எனவே முதல் முயற்சியான ஒடிசி கேம்ஸ் லேப்டாப், மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட வேண்டும் என்பதற்காக பல நவீன டெக்னாலஜியை இதில் புகுத்தியுள்ளது. அடுத்த தலைமுறையினர் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டேப்பில் என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்பதை பார்ப்போமா

15.6 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் உள்ள நோட்புக் ஒடிசி 15 என்ற மாடல் லேப்டாப்பும், 17.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கூடிய நோட்புக் ஒடிசி 17 என்ற மாடலும் என இரண்டு மாடல்களில் கேம்ஸ் லேப்டாப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மாடல்களும் வித்தியாசமான கண்ணை கவரும் டிசைனில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்' பிளான்.!

பொதுவாக கேம்ஸ் விளையாடுபவர்கள் அதிக நேரம் லேப்டாப்பை பயன்படுத்துவார்கள் என்பதை கணக்கில் கொண்டு பயனாளிகளின் கண்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் இந்த லேப்டாப்பில் கிளார் அதிகம் இல்லாத வகையிலும், குறைந்த அளவு ஒளி பிரதிபலிப்பு உள்ள வகையிலும் இந்த லேப்டாப்புகள் உருவாகி வருகின்றன.

மேலும் இந்த லேப்டாப்பில் ஹை குவாலிட்டி வீடியோ காணும் வகையில் HDR வீடியோ அனுபவம் பெறலாம். அதுமட்டுமின்றி ஹை குவாலிட்டி வைப்ரண்ட் இமேஜூம் கிடைக்கும்

இதில் உள்ள வளைந்த கீ பட்டன்கள், டச்பேட், மல்டி கலர் கீபோர்ட் லைட்டுக்கள் ஆகியவை இந்த லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள்.

மேலும் அதிக நேரம் பயன்படுத்தினால் வெப்பம் ஆகாத வகையில் கூலிங் சிஸ்டமும் இந்த லேப்டாப்பில் உள்ளது.

ஏற்கனவே சந்தையில் பல கேம்ஸ் லேப்டாப்புகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாலும் சாம்சங் கேம்ஸ் லேப்டாப்பின் வரவு நிச்சயம் அந்நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung announces its first gaming laptop calling it as Notebook Odyssey. Check out the details here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X