சிம் வசதியுடன் கூடிய டேப்லெட்டைக் களமிறக்கும் செல்கான்

Posted By: Karthikeyan
சிம் வசதியுடன் கூடிய டேப்லெட்டைக் களமிறக்கும் செல்கான்

செல்கான் மொபைல்ஸ் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு செல்டேப் (சிடி2) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த டேப்லெட்டில் சிம் கார்டையும் பயன்படுத்தலாம்.

7 இன்ச் அளவில் வரும் இந்த டேப்லெட் ரூ.7,499க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

மேலும் இந்த டேப்லெட் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512 ரேம் மற்றும் 3ஜி வசதி போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. செல்கான் தங்களது வர்த்தகத்தை உலக அளவிற்கு விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைமை இயக்குனர் முரளி தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த வருடம் அந்நிறுவனம் ரூ.326 கோடி வருமானம் ஈட்டியது என்றும் அதோடு இந்தியாவின் பல மாநிலங்களில் அந்நிறுவனம் பரவி இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதன் மூலம் வரும் காலங்களில் தங்களது வர்த்தகம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் வீரத் கோலியும், பிரபல திரைப்பட நடிகை தமன்னாவும் இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot