Home
Computer

கெனான் வழங்கும் அசத்தலான இரண்டு புதிய கேமராக்கள்!

By Karthikeyan
கெனான் வழங்கும் அசத்தலான இரண்டு புதிய கேமராக்கள்!

கெனான் நிறுவனம் இப்போது தனது பவர் ஷாட் வரிசை கேமராக்களுக்களோடு மேலும் இரண்டு புதிய கேமராவை சேர்க்க இருக்கிறது. இந்த புதிய கேமராக்கள் ஆட்டோமேட்டட் ஸ்டெபிலைசேசன் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் ஒரு படத்தை மேக்ரோ அல்லது ட்ரைபோட் முறையி்ல எடுத்தாலும் படத்தை மிகத் தெளிவாக எடுக்க முடியும். இந்த கேமராக்களில் இன்டலிஜென்ஸ் ஐஎஸ் என்ற முக்கிய அம்சத்தை கொண்டிருக்கிறது.

கெனான் வழங்கும் இந்த புதிய கேமராக்களின் பெயர்கள் பவர் ஷாட் எல்ப் 520 எச்எஸ் மற்றும் பவர் ஷாட் எல்ப் 110 எச்எஸ் ஆகும். பவர் ஷாட் எல்ப் 520 எச்எஸ் எல்ப் 500 எச்எஸ்ஸிற்கு அடுத்தபடியாக வருகிறது. இந்த கேமராவில் கெனான் மைக்ரோ எஸ்டி கார்டுகளை முதல் முறையாகப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் இந்த கேமரா அடக்கமாக மற்றும் சிறியதாக இருந்தாலும் இதில் அதிகமாக சேமிக்க முடியும். இந்த கேமரா 0.88 இன்ச் தடிமனை மட்டுமே கொண்டிருக்கிறது.

இந்த புதிய எல்ப் 520 எச்எஸ் பெட்டி வடிவத்தில் வருகிறது. ஆனால் அதன் பழைய டிஸைன் கேர்வி வடிவத்தில் வந்தது. இந்த புதிய கேமரா உறுதியாத் தரமான படங்களை எடுத்துத் தள்ளும் என நம்பலாம்.

இந்த கேமராவில் பேக்ஸைட் இல்லுமினேட்டட் சிஎம்ஒஎஸ் சென்சார் உள்ளதால் இது 10 மெகா பிக்சலை வழங்குகிறது. அதனால் இந்த கேமரா எடுக்கும் படங்கள் உயர் தரத்தில் இருக்கும். மேலும் இதன் சூம் 28 மிமீ முதல் 336 மிமீ ரேஞ்சைக் கொண்டுள்ளது.

இதன் பின்புறம் 3 இன்ச் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. ஆனால் எல்ப் 500ஐப் போல இது டச் இன்டர்பேசைக் கொண்டிருக்கவில்லை. இந்த கேமரா 1080பி வீடியோவை ரிக்கார்டு செய்யும் திறன் கொண்டது. அதுபோல் இதன் வேகத்தைப் பார்த்தால் ஒரு வினாடிக்கு 24 பிரேம்களாகும். அதுபோல் இந்த கேமரா ஸ்டீரியோ அடியோவையும் ரிக்கார்ட் செய்யும் வசதி கொண்டுள்ளது. அதுபோல் 58 சீன் டைப்புகளும் இந்த கேமராவில் உண்டு.

அடுத்ததாக கேனன் பவர் ஷாட் எல்ப் 110 எச்எஸ் கேமராவைப் பார்த்தால் அது எல்ப் 520 எச்எஸ்ஸைப் போல் சூமைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இது 16 மெகா பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. அதே நேரத்தில் இது டிஜிக் 5 இமேஜ் ப்ராசஸர் மற்றும் பேஸ் ஐடி வசதியை வழங்குகிறது. இந்த வசதிகளை எல்ப் 520லும் பார்க்கலாம். இந்த கேமரா 5எக்ஸ் சூம் மற்றும் 25 சீன் மோடுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா பல நிறங்களில் வருகிறது.

விலையைப் பார்த்தால் எல்ப் 520 எச்எஸ் ரூ.15,500க்கும் எல்ப் 110 எச்எஸ் ரூ.13,000க்கும் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X