பியாண்டு நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லட்கள்!

By Super
|

பியாண்டு நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லட்கள்!
பியாண்டு டெக் நிறுவனம் புதிதாக இரண்டு டேப்லட்களை வெளியிட்டுள்ளது. மீ-புக் எம்ஐ-5 மற்றும் எஐ-9 என்ற 2 ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் டேப்லட்களை வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்களும் வெளியிடப்படுள்ளது. இதன் விலையை பற்றி அறிவதற்கும் முன்பு இந்த டேப்லட்களின் தொழில் நுட்ப வசதிகளை பற்றியும் அறியலாம்.

இந்த இரண்டு டேப்லட்களில் ஒன்று 7 இஞ்ச் திரையினையும், இன்னொன்று 9 இஞ்ச் திரையினையும் கொண்டதாக இருக்கும். எம்ஐ-5 டேப்லட் சிம் கார்டு ஸ்லாட் மற்றும் வாய்ஸ் காலிங் வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இந்த டேப்லட்டில் 3ஜி டோங்கில், ப்ளூடூத் ஆகிய வசதிகளையும் பயன்படுத்தலாம். இன்னும் இந்த டேப்லட்களின் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பியாண்டு மீ-புக் எம்ஐ-5 டேப்லட்:

 • 7 இஞ்ச் திரை வசதி

 • 800 X 480 பிக்ஸல் திரை துல்லியம்

 • மல்டி தொடுதிரை வசதி

 • 348 கிராம் எடை

 • ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

 • 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர்

 • விஜிஏ முகப்பு கேமரா

 • 3.5 எம்எம் ஆடியோ ஜேக்

 • 2ஜி வாய்ஸ் காலிங் வசதி

 • 3ஜி டோங்கில் தொழில் நுட்ப வசதி

 • 32 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி வசதி

 • 3,000 எம்ஏஎச் பேட்டரி

 • இந்த டேப்லட் ரூ. 7299 விலை கொண்டதாக இருக்கும்

பியாண்டு மீ-புக் எம்ஐ-9:

 • 9 இஞ்ச் திரை வசதி

 • மல்டி தொடுதிரை வசதி

 • ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

 • 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வசதி

 • விஜிஏ முகப்பு கேமரா

 • 3.5 எம்எம் ஆடியோ ஜேக்

 • 1080 வீடியோ ப்ளேபேக் வசதி

 • 3ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதி

 • 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதி

 • இந்த டேப்லட் ரூ. 7,499 விலை கொண்டதாக இருக்கும்
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X