1 மில்லியனுக்கும் அதிகமான டேப்லட்களை களமிறக்கும் பியாண்டு!

Posted By: Staff
1 மில்லியனுக்கும் அதிகமான டேப்லட்களை களமிறக்கும் பியாண்டு!
பிசி டேப்லட்கள் மக்கள் மத்தியில் ரொம்ப பிரசித்தமாகி வருகிறது. கம்ப்யூட்டர்களை விட அதிகமானோர் டேப்லட்களை வாங்கி வருகின்றனர். இதனால் தினம் புதிய டேப்லட்கள், மின்னணு சந்தைகளில் விற்பனையாகி வருகின்றன.

பியாண்டு டெக் நிறுவனம் மீ புக் வரிசை டேப்லட்டை அறிமுகம் செய்கிறது. இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும்.

சிறந்த டேப்லட்களையும், ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பியான்டு நிறுவனத்தின் உயர் அதிகாரியான சுபாஷ் முத்தா தெரிவித்துள்ளார். இந்த மீ புக் டேப்லட்கள் ரூ. 4,300 விலையில் இருந்து ரூ. 11,000 விலை வரையில் கிடைப்பதாக இருக்கும்.

ஒரு ஆண்டுக்கும் 1 மில்லியனுக்கும் அதிகமா டேப்லட்களை வழங்குவதாகவும், இதன் மூலம் 15 சதவிகிதம் மார்கெட் பங்குகளை உயரச் செய்ய முடியும் என்றும் பியான்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மனீஷ் ஜெயின் கூறியுள்ளார். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்