கணினிக்கு தேவையான மெமரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்..

|

கம்ப்யூட்டருக்கு தேவையான பிராசஸர், ரேம், கிராஃபிக்ஸ் யுனிட் உள்ளிட்டவற்றை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று மெமரியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம்.

கணினிக்கு தேவையான மெமரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்..

எஸ்எஸ்டி-க்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வரும் நிலையில் இவற்றின் விலை அனைவரும் வாங்கக் கூடிய பட்ஜெட்டில் கிடைக்கிறது. எஸ்எஸ்டி-க்கள் உங்களது பணிளை வேகமாக்குவதோடு இவை கணினியில் உள்ள செயலிகள் மற்றும் ஃபைல் டிரான்ஸ்ஃபெர்களை வேகமாக்கும் திறன் கொண்டுள்ளன.

குறிப்பாக பழைய ஹார்டு டிஸ்க் டிரைவ்களுக்கு சமீபத்திய சாட்டா 3 டிரைவ் மாற்றாக அமைந்துள்ளது. இவை முந்தைய சாட்டா 2 டிரைவ்களை விட புதிய சாட்டா 3 டிரைவகளின் வேகம் சீராக இருக்கும்.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் எச்டிடி:

மலிவு விலையில் அதிக மெமரி கொண்ட டிரைவ்கள் கிடைக்கிறது. 1000 ஜிபி ஹார்டு டிரைவ்கள் ரூ.3000 முதல் துவங்குகிறது.

எஸ்எஸ்டி கான்ஃபிகரேஷன்:

எஸ்எஸ்டியை பொருத்த வரை நீங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் விலைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். 120 ஜிபி எஸ்எஸ்டி முழுமையான விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் மற்றும் அடோப் கிரேயட்டிவ் கிளவுட், மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் போன்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்யலாம்.

சற்றே கூடுதல் பணம் செலுத்தும் போது 256 ஜபி எஸ்எஸ்டியுடன் கூடுதலாக சில கேம்களையும் இன்ஸ்டால் செய்யலாம். 500 ஜிபி அல்லது 1000 ஜபி எஸ்எஸ்டி அதிகளவு மென்பொருள் மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்ய முடியும்.

சாட்டா அதிக பிரபலமானது:

டெஸ்கடாப் கணினிகளில் மிகவும் பிரபலமானதாக சாட்டா ஸ்டோரேஜ் இருக்கிறது. புதுவரவு சாட்டா எக்ஸ்பிரஸ் தகவல்களை அதிவேகமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. சாதாரண சாட்டா டிரைவ்கள் அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கிறது. அதிவேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு வேண்டுமெனில் RAID வகை டிரைவ்களை தேர்வு செய்யலாம்.

அதிநவீன கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் 0,1,0+1, மற்றும் 5 RAID மோட்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இதில் RAID 5 அதிக பிராசஸிங் வேகம் தேவைப்படும். சிறப்பாண எஸ்எஸ்டிக்களை தேர்வு செய்து வாங்கும் முன் இவற்றில் சிறப்பானவற்றை அறிந்து கொள்ள இண்டர்நெட் விமர்சனங்களை பார்க்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
You can choose the right amount of storage that is needed for your PC from the guide given here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X