Home
Computer

புதிய பென்டா டிபேட் டேப்லட்டினை வழங்கும் பிஎஸ்என்எல்!

By Super

புதிய பென்டா டிபேட் டேப்லட்டினை வழங்கும் பிஎஸ்என்எல்!
பிஎஸ்என்எல் நிறுவனம் சில குறைந்த விலை கொண்ட டேப்லட்களை பேன்டெல் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்வதாக சில தகவல்களை கேட்டிருப்போம். அந்த வரிசையில் பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-802-சி என்ற புதிய டேப்லட்டினை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

இந்த டேப்லட் குறைந்த விலை கொண்ட டேப்லட்களின் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு எளிய தொகையாகத் தான் இருக்கும்.

பொதுவாக டேப்லட்கள் 7 இஞ்ச் கொண்டதாக இருக்கின்றன. இல்லையென்றால் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கின்றன. ஆனால் பென்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் மேல் கூறப்பட்டுள்ள இரண்டு விதமான திரைக்கும் இடைப்பட்டதாக 8 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கிறது.

உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கும். கார்டெக்ஸ் ஏ-8 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் இந்த டேப்லட்டின் சிறப்பான இயக்கித்திற்கு ஒத்துழைக்கும்.

சில டேப்லட்களில் மெமரி வசதியினை விரிவுபடுத்த முடிவதில்லை. இதில் 4ஜிபி இன்டர்னல் மெமரி இருப்பதோடு, இந்த வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பென்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் ரூ. 14,699 விலை கொண்டதாக இருக்கும். இந்த விலை வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப சாதனங்களுக்காக செலவிடும் சாதாரண விலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X