குறைந்த விலை டேப்லட்டை வெளியிடும் பிஎஸ்என்எல்!

இந்த பென்டா டிபேட் ஐஎஸ்-701-சி டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டது.
சிறப்பான வைபை தொழில் நுட்ப வசதிக்கும் சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட் 1 ஜிகாஹர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரையும் வழங்கும்.
சிறப்பான பிராசஸர் இருப்பதால், 7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட் வேகமான செயல்பாட்டினையும் கொடுக்கும். இதன் 7 இஞ்ச் திரை 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.
பென்டா டிபேட் ஐஎஸ்-701-சி டேப்லட் 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் வழங்கும். இன்னும் இந்த டேப்லட் பற்றி சொல்ல வேண்டும் என்றால் குறைந்த விலையில், ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டேப்லட் கிடைப்பது கடினம் தான்.
அந்த அடிப்படையில் பென்டா டிபேட் ஐஎஸ்-701-சி டேப்லட் ரூ. 4,999 விலை கொண்டது. இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் 3 குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வெளியிடுவதாக தகவல்கள் வெளியானது.
இதனால் இந்நிறுவனத்திடம் இருந்து இன்னும் சில டேப்லட்கள் வெளியாகும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications