Home
Computer

சென்னையில் பிஎஸ்என்எல் டேப்லட் அறிமுகம்!

By Super

சென்னையில் பிஎஸ்என்எல் டேப்லட் அறிமுகம்!
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக குறைந்த விலையில் 3 புதிய டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று புதிய டேப்லட்களும் சென்னையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு டேப்லட்கள் 7 இஞ்ச் திரை வசதி கொண்டது.

பென்டா டிபேட் ஐஎஸ்-701-ஆர், டிபேட் டபிள்யூஎஸ்-704-சி, டபிள்யூஎஸ்-704-சி என்ற மூன்று புதிய டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட்கள் பற்றிய தொழில் நுட்ப விவரத்தினையும் பார்க்கலாம்.

டிபேட் ஐஎஸ்-701-ஆர் டேப்லட் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். மேலும் இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினையும் வழங்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

டிபேட் ஐஎஸ்-701-ஆர் டேப்லட்டில் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டது. 2ஜி தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட்டில் வைபை வசதியினையும் எளிதாக பெறலாம். 2ஜிபி மெமரி வசதியினையும் கொண்ட இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டிபேட் ஐஎஸ்-701-ஆர் டேப்லட் ரூ.3,250 விலை கொண்டது.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் இன்னொரு டேப்லட்டான டிபேட் டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டும் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இன்டர்நெட் வசதியுடன் கூடிய இந்த டேப்லட் ரூ.10,999 விலை கொண்டது.

4 ஜிபி இன்பில்டு மெமரி வசதி கொண்ட டபிள்யூஎஸ்-704-சி டேப்லட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஆனால் இந்த டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டில் 8 இஞ்ச் திரை வசதி கொண்டது. 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் இந்த டேப்லட் கொண்டிருக்கும். டிபேட் டபிள்யூஎஸ்-704-சி டேப்லட் ரூ-13,500 விலை கொண்டது.

இப்படி 3 வித்தியாசமான விலை கொண்ட மூன்று விதமான டேப்லட்களை பிஎஸ்என்எல் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட்கள் குறிப்பாக சென்னையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X