Home
Computer

பாக்ஸ்லைட் வழங்கும் அட்டகாசமான ப்ரொஜக்டர்கள்!

By Karthikeyan
பாக்ஸ்லைட் வழங்கும் அட்டகாசமான ப்ரொஜக்டர்கள்!

ப்ரொஜக்டர்களைப் பொருத்தவரை பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ரொஜக்டர்கள் மட்டுமே விரும்பி வாங்கப்படுகின்றன. ஆனால் பிரபலமாகாத நிறுவனங்களும் பல சிறந்த ப்ரொஜக்டர்களை சந்தையில் களமிறக்கி வருகின்றன.

அந்த வகையில் ப்ரொஜக்டர் தயாரிப்பில் உலக அளவில் முன்னனியில் இருக்கும் பாக்ஸ்லைட் நிறுவனம் தனது புதிய ப்ரொசக்டோரைட் வரிசை ப்ரொஜக்டர்களை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த வரிசையில் 5 புதிய மாடல் ப்ரொஜக்டர்களை அந்நிறுவனம் களமிறக்குகிறது.

குறிப்பாக வர்த்தக தேவைகள் மற்றும் கல்வி தேவைகள், இன்றைய இளையோரின் தேவைகள் மற்றும் கற்போரின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக இந்த ப்ரொஜக்டர்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க நிறுவனமான பாக்ஸ்லைட் இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த இடாக்சிஸ் சிஸ்டம்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து இந்த ப்ரொஜக்டர்களை இந்தியாவில் களமிறக்குகிறது.

ஏற்கனவே பல தரமான ப்ரொஜக்டர்களை இந்த பாக்ஸ்லைட் களமிறக்கி இருப்பதால் இந்த புதிய ப்ரொஜக்டர்களும் சூப்பராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ப்ரொஜக்டர்கள் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. 5 நிமிடங்களுக்குள் இந்த ப்ரொஜக்டரை இயக்க முடியும். அதுபோல் நவீன் ஆன்டி தெப்ட் வசதிகள் உள்ளன. மேலும் ஆட்டோ சேர்ச், ஆட்டோ சின்க், ஆட்டோ சீலிங், ஆட்டோ கீஸ்டோன் மற்றும் ஆட்டோ பில்டர் அலர்ட் போன்ற வசதிகளும் இந்த சாதனங்களில் உண்டு.

அதோடு இந்த ப்ரொஜக்டர்களில் 8வாட்ஸ் மோனோ ஸ்பீக்கர் மற்றும் ஒரு சாப்ட்வேர் பேக்கேஜூம் உண்டு.

இந்த ப்ரொஜக்டர்களின் விலை ரூ.69,000லிருந்து இருக்கும். மேலும் இவை 5 வருட உத்திரவாதத்துடன் வருகின்றன. அதுபோல் இதில் இருக்கும் விளக்கிறக்கு 2 வருட உத்திரவாதம் உண்டு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X