Home
Computer

எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் அள்ளித் தரும் வீடியோவேவ் II

By Karthikeyan
எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் அள்ளித் தரும் வீடியோவேவ்  II

மிகத் தரமான பொழுதுபோக்கு சாதனங்களை தயாரித்து வரும் போஸ் நிறுவனம் ஒரு புதிய ஆல் இன் ஒன் பொழுதுபோக்கு சாதனத்தை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய சாதனத்திற்கு வீடியோவேவ் II என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த சாதனத்தில் எல்லா வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம். இந்த சாதனம் 2 மாடல்களில் வருகிறது. அதாவது 140 செமீ மற்றும் 117 செமீ அளவுகள் கொண்ட திரைகளுடன் வருகிறது.

140 செமீ அளவு திரை கொண்ட சாதனம் ரூ.4,99,388க்கும் அதே நேரத்தில் 117 செமீ அளவு திரை கொண்ட சாதனம் ரூ.4,19,513க்கும் விற்கப்பட இருக்கிறது. மேலும் இந்த சாதனங்கள் செப்டம்பர் இறுதிக்குள் போஸ் நிறுவனத்தின் முக்கிய கடைகளில் விற்கப்படும்.

இந்த புதிய வீடியோவேவ் II சிஸ்டம் எச்டி டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் ஒரு மியூசிக் சிஸ்டம் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இதில் உள்ள ஹோம் தியேட்டர் உயர் திறன் கொண்ட 6 ஊபர்களைக் கொண்டிருப்பதால் இதன் சவுண்ட் சிஸ்டம் அமர்க்களமாக இருக்கும்.

மேலும் இதன் ஒலி அமைப்பை மெருகு செய்யும் வகையில் இந்த சாதனம் போஸ் பேஸ்கைட் சவுன்ட் ரேடியேட்டர் தொழில் நுட்பம் மற்றும் போஸ் எடிஎபிடிக்யு தொழில் நுட்பம் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது.

அதோடு இந்த சாதனம் ஐபோட் மற்றும் ஐபோன் டோக்குகளையும் கொண்டிருப்பதால் இந்த சாதனங்களை இந்த வீடியோவேவில் மிக எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம்.

இந்த வீடியோவேவ் 1080பி எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டிருப்பதால் இதன் திரை மிகத் துல்லியமாக இருக்கும். அதோடு இந்த டிஸ்ப்ளேயில் ஆப்பிள் டிவி, ப்ளூ-ரே டிஸ்க் ப்ளேயர் மற்றும் செட் அப் பாக்ஸ் போன்ற 6 சாதனங்களை இணைத்துக் கொள்ளவும் முடியும்.

ஆனால் இந்த சாதனத்தின் விலைதான் சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இதன் வசதிகள் ஆச்சரியத்தில் எல்லைக்கு மக்களை அழைத்துச் செல்லும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X