Home
Computer

ப்ளேபுக் டேப்லெட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பிளாக்பெர்ரி!

By Karthikeyan
ப்ளேபுக் டேப்லெட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பிளாக்பெர்ரி!

ரிம் நிறுவனம் இந்த புதிய ஆண்டிற்கான புதிய திட்டங்களுடன் களம் இறங்குகிறது. அந்நிறுவனத்தில் ப்ளாக்பெரி ப்ளேபுக் யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு மிக உயர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்டிருந்துலும் அந்த டிவைஸ் கடந்த வருடம் ஒரு மோசமான பெரிய சரிவைச் சந்திந்தது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

ரிம் நிறுவனம் தனது ப்ளேபுக் டேப்லெட்டுகளை 50 சதவீத தள்ளுபடியுடன் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. பின் அதே வர்த்தக உத்தியை உலக அளவில் பயன்படுத்தியது. அதனால் தனது ப்ளேபுக் டேப்லெட்டை 299 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்தது. அவ்வாறு இருந்தும் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து இப்போது ப்ளாக்பெரி டேப்லெட்டுகளை இன்னும் அதிநவீனப்படுத்துகிறது.

விரைவில் 7 இன்ச் மற்றும் 10 இன்ச் ப்ளாக்பெரி டேப்லெட்டுகள் வரவிருக்கின்றன. ஆனால் அதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும். வரும் புதிய ப்ளாக்பெரிகள் கண்டிப்பாக 3ஜி வசதியைக் கொண்டிருக்கும். வரும் ஏப்ரலில் ப்ளாக்பெரி 7 இன்ச் டேப்லெட்டும் டிசம்பரில் 10 இன்ச் டேப்லெட்டும் வெளிவரும் என்று தெரிகிறது. மேலும் இந்த டேப்லெட்டுகள் அதிநவீன வசதிகளைக் கொண்டிருக்கும் என நம்பலாம். மேலும் இவை ப்ளாக்பெரி ஒஎஸ் வி2.0வைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக புதிய ப்ளாக்பெரி டேப்லெட்டுகள் சாம்சங் கேலக்ஸி டேபலெட்டுகளுக்கு வயிற்றில் புளியைக் கறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங்கின் ரசிகர்கள் கேலக்ஸி டேப்லெட்டை வீழ்த்த அனுமதிக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.

ஆனால் விலையைப் பொருத்தமட்டில் சாம்சங் கேலக்சி ப்ளாக்பெரியன் விற்பனையைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் பொருளின் விலை ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் புதிய ப்ளாக்பெரி 10 வரும் செப்டம்பர் மாதம் வெளிவரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X