Home
Computer

ப்ளேபுக்கில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யும் ப்ளாக்பெர்ரி!

By Karthikeyan

ப்ளேபுக்கில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யும் ப்ளாக்பெர்ரி!
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் ரிம் நிறுவனம் தனது புதிய ப்ளாக்பெரி ப்ளேபுக்கில் ப்ளாக்பெரி 10 இயங்குதளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது. ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை. மேலும் இந்த புதிய ப்ளாக்பெரி ப்ளேபுக்கைப் பற்றிய தகவல்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு தகவல்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளாக்பெரி ப்ளேபுக்கிற்கு உலக அளவில் அமோக வரவேற்பு உள்ளதால் புதிய ப்ளாக்பெரி 10 இயங்குதளத்தில் இயங்கும் புதிய ப்ளாக்பெரி ப்ளேபுக் உறுதியாக மிகவும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர இருக்கும் புதிய ப்ளாக்பெரி இயங்குதளம் புதிய மெனு லே அவுட்டுடன் வரும். மேலும் இந்த புதிய இயங்குதளத்தில் ஏராளமான பேன்ஸ், அப்ளிகேசன் போல்டர்கள் மற்றும் நிரந்தர ஷார்ட்கட் டோக் போன்ற வசதிகளும் இருக்கும்.

அதுபோல் இந்த புதிய இயங்குதளத்தில் வீடியோ உரையாடலில் ஆட்டோமேட்டிக் பில்டரிங் வசதி இருக்கும். இதன் வெப் ப்ரவுசரில் புதிய ரீடிங் மோடும் உள்ளது. கணினியிலிருந்து ப்ளேபுக்கிறக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்ய பைல் மேனேஜர் மற்றும் பிரிண்ட் டூகோ போன்ற வசதிகளும் உள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த கேமரா பல வீடியோ கேம்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக ப்ளாக் பிகாசஸ் போன்ற கேம்களும் இதில் அடக்கம். அதனால் வரும் புதிய இயங்குதளத்தில் வர இருக்கும் புதிய ப்ளாக்பெரி ப்ளேபுக்கிற்கு இப்போதிருந்தே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X