ப்ளாக்பெரி ப்ளேபுக் மற்றும் கின்டில் பயர் டேப்லெட்: ஒப்பீடு

ப்ளாக்பெரி ப்ளேபுக் மற்றும் அமேசான் கின்டில் பயர் ஆகிய இரண்டு டேப்லெட்டுகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றினாலும் அவற்றில் விலையில் மாறுபடுகின்றன. அதனால் கின்டில் பயர் டேப்லெட்டை ப்ளாக்பெரி வீழ்த்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு டேப்லெட்டுகளின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது இரண்டுமே 7 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கின்றன. ப்ளாக்பெரி 177 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் 600 x 1024 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கின்டில் பயர் 170 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் 1024 x 600 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டுமே 3.5 மிமீ ஆடியோ ஜாக்குடன் ஒலி பெருக்கியையும் கொண்டுள்ளன. கேமராவைப் பொருத்தவரை ப்ளாக்பெரி ஆட்டோ போக்கஸ் மற்றும் 2592x1944 பிக்சல் ரிசலூசனுடன் 5 மெகா பிக்சல் முக்கிய கேமராவைக் கொண்டிருக்கிறது. ஆனால் கின்டில் இந்த முக்கிய கேமராவைக் கொண்டிருக்கவில்லை. அதுபோல் ப்ளாக்பெரியில் இந்த முக்கிய கேமரா மூலம் 30எப்பிஎஸ் வேகத்தில் 1080பி ரிசலூசன் கொண்ட வீடியோ வசதி உண்டு. அதுபோல் 3 மெகா பிக்சல் கொண்ட துணை கேமராவும் ப்ளாக்பெரியில் உண்டு. ஆனால் கின்டில் பயரில் கேமரா வசதி கிடையாது.
இணைப்பு வசதிகளைப் பார்த்தோமானால் ப்ளாக்பெரி வைபை 802.11 எ/பி/ஜி/என்னையும் அதே நேரத்தில் கின்டில் பயர் 802.11 பி/ஜி/என்னையும் கொண்டிருக்கின்றன. அதுபோல் ப்ளாக்பெரியில் ப்ளூடூத் 2.1 வசதி உண்டு. ஆனால் கின்டில் பயரில் இந்த வசதி கிடையாது. இரண்டுமே யுஎஸ்பி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி வி2.0 வசதியைக் கொண்டுள்ளன.
மேலும் சிப்செட்டைப் பொருத்தவரை இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே டிஐ ஒஎம்எபி 4430ஐக் கொண்டுள்ளன. அதுபோல் டூவல் கோர் எஆர்எம் கோர்ட்டெக்ஸ் - எ9 ப்ராசஸர் இந்த இரண்டு டேப்லெட்டுகளிலும் உண்டு. இயங்கு தளத்தைப் பொருத்தவரை ப்ளாக்பெரி அதன் ப்ளாக்பெரி இயங்கு தளத்திலும் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திலும் இயங்குகின்றன.
வடிவமைப்பை பொருத்தவரை இரண்டு டேப்லெட்டுகளும் ஒன்றாகத் தெரிந்தாலும் ப்ளாக்பெரி ப்ளேபுக் சற்று மெல்லியதாக இருக்கிறது. இரண்டுமே மல்டி டச் வசதி கொண்ட டிஸ்பேளையைக் கொண்டிருந்தாலும் கின்டில் பயர் கொரில்லா க்ளாஸைக் கொண்டுள்ளது.
விலையைப் பொருத்தமட்டில் ப்ளாக்பெரி ப்ளேபுக் ரூ.20000க்கும், கின்டில் பயர் ரூ.15000க்கும் விற்கப்படும்.


Click it and Unblock the Notifications