புதிய டேப்லட்டை அறிமுகம் செய்யும் பிளாக்பெர்ரி!

இந்த டேப்லட் எப்போது வெளியாகும் என்று எந்த செய்தியும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த 4ஜி ப்ளபுக் டேப்லட்டின் தொழில் நுட்ப விவரத்தினை கொஞ்சம் பார்வையிடலாம்.
இந்த டேப்லட் பிளாக்பெர்ரி 2.0 இயங்குதளம் கொண்டதாக இருக்கும். நிறைய நிறுவனங்கள் நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட இயங்குதளத்தினை கொண்டிருந்தாலும், பிளாக்பெர்ரி நிறுவனம் தனது சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கி வருகிறது. இதனால் ஒவ்வொன்றையும் சிறப்பாக சோதித்த பின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
அதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட்டும் சிறப்பான தொழில் நுட்பத்தினையே கொடுக்கும் என்று நம்பலாம். இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். பிளாக்பெர்ரி நிறுவனம் வழங்கும் எலக்ட்ரானிக் சாதனத்தின் வடிவமைப்பு எப்போதும் ஒரு தனித்தன்மையாக தான் இருக்கும்.
இதற்கு உதாரணமாக கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை சொல்லலாம். மேலும் இந்த டேப்லட்டின் திரை வெறும் 7 இஞ்ச் தான் என்றாலும், 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 5 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் இந்த டேப்லட், 4,800 எம்ஏஎச் பேட்டரியினை கொடுக்கும்.
இதில் உள்ள 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரையும் கொண்டுள்ளது. அதோடு இந்த டேப்லட் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மெமரி வசதிகளிலும் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
பிளாக்பெர்ரி 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் ரூ.30,983 விலை கொண்டதாக இருக்கும் என்றும், ஜூலை 31ம் தேதி வெளியாகும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications