பொழுதுபோக்கு வசதிகளுடன் புதிய எச்பி லேப்டாப்!

By Super
|

பொழுதுபோக்கு வசதிகளுடன் புதிய எச்பி லேப்டாப்!
எச்பி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் தரமான பிரான்டடு சாதனங்களாக கருதப்படுகிறது. உயர்தரமான மேசை கணினிகளையும், நோட்புக்குகளையும் எச்பி வழங்கிக் கொண்டே இருக்கிறது.

2001ல் வந்த எச்பி வழங்கிய காம்பேக்கிலிருந்து வந்த பின் பெவிலியன் மற்றும் காம்பேக் பிரேசாரியோ வகை லேப்டாப்புகள் வரை அதன் தரம் உயர்ந்து கொண்ட இருக்கிறது. மேலும் எச்பி உலகம் முழுவதும் தனது படைப்புகளை வழங்கி வருவதால் கணினி தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனமாக இருந்து வருகிறது.

இந்தியாவிலும் எச்பியின் பங்களிப்பு மிக அதிகம். முதலில் தனது மேசை கணினிகளையும் பின் லேப்டாப்புகளையும் எச்பி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்போது டெல், சோனி வயோ, லெனோவா, எச்சிஎல் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் இருந்த போதுகூட எச்பி நிறுவனம் இந்தியர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்தியாவில் தனக்குக் கிடைத்த பெயரை சரியாக தக்கை வைத்துக் கொண்டு வருகிறது எச்பி.

அந்த வகையில் எச்பி நிறுவனம் புதிதாக எச்பி ப்ளாக் 2000 -329விஎம் என்ற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

மேலும் அது ஏஎம்டி இ350 டூவல் கோர் பிராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் கிராபிக்ஸ் கார்டு ஏஎம்டி ரேடியோன் 6310 எச்டி டிஸ்க்ரீட்-க்ளாஸ் ஆகும். இந்த கார்டு 1461 எம்பி கிராபிக்ஸ் மெமரியை கொண்டது. மேலும் இந்த லேப்டாப் 3ஜிபி கொண்ட டிடிஆர் எஸ்டி ரேம், மற்றும் 320ஜிபி ஹார்டு டிரைவையும் கொண்டுள்ளது. மேலும் இதன் பிராசஸர் 1.60ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

இந்த லேப்டாப்பில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. இது சூப்பர் மல்டி டிவிடி பர்னரைக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் இதில் 168 மணி நேர எச்டி வீடியோ அல்லது 91,000 பாடல்களைப் பதிவு செய்ய முடியும்.

இதன் எச்டி பிரைட் வியூவ் தொழில்நுட்பம் கொண்ட திரை 15.6 இன்ச் அளவைக் கொண்டது. இந்த திரை டயகோனல் எல்இடி வசதியையும் கொண்டது. இந்த திரையின் ரிசலூசன் 1366x768 பிக்ஸல் ஆகும். வைஃபை வசதியும் கொண்டிருக்கிறது.

எச்பி ப்ளாக் 2000 -329விஎம் தரமான இசைக்காக ஆல்டெக் லேன்சிங் ஸ்பீக்கரைக் கொண்டிருக்கிறது. இதில் 3 யூஎஸ்பி 2.0 போர்ட்டுகளையும், வெப்கேமையும் கொண்டுள்ளது. மேலும் 2 இன் 1 மெமரி கார்ட் ரீடரையும் வழங்குகிறது. அதுபோல் இதன் பேட்டரி பேக் அப் 5.5 மணி நேரம் ஆகும். இதன் விலை பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X