ரூ.25,000-க்குள் வாங்கச் சிறந்த சூப்பர் லேப்டாப் மாடல்கள்.! இதோ பட்டியல்.!

|

கல்வி முதல் தினசரி வேலை வரை அனைத்திற்கும் அருமையாக பயன்படுகிறது லேப்டாப். குறிப்பாக ஆசஸ், டெல், லெனோவா, ஏசர் போன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் கம்மி விலையில் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளன.

நல்ல லேப்டாப்

நல்ல லேப்டாப்

அதேபோல் இப்போது வெளிவரும் புதிய லேப்டாப் மாடல்களில் தனித்துவமான மென்பொருள் வசதி உள்ளது என்றே கூறலாம். மேலும் நீங்கள் ரூ.25,000 விலைக்குள் ஒரு நல்ல லேப்டாப் மாடலை தேடுகிறீர்களானால் இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். அதாவது
இப்போது ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்களைப் பார்ப்போம்.

Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?

 1.ஆசஸ் விவோபுக் 15 (2020)

1.ஆசஸ் விவோபுக் 15 (2020)

ஆசஸ் விவோபுக் 15 (2020) எனும் லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப்4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை வழங்குகிறது. குறிப்பாகஆசஸ் விவோபுக் 15 இன்டெல் எச்டி கிராபிக்ஸ் வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளம், Intel Celeron N4020 பிராசஸர் மற்றும் 37WHrs பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆசஸ் லேப்டாப். மேலும் 15.6-இன்ச் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஆசஸ் விவோபுக் 15 (2020) மாடல்.

ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! Truke BTG Alpha-வை எப்போ வாங்கினால் இந்த விலை?ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! Truke BTG Alpha-வை எப்போ வாங்கினால் இந்த விலை?

 2.ஹெச்பி குரோம்புக் Intel Celeron

2.ஹெச்பி குரோம்புக் Intel Celeron

அமேசான் தளத்தில் ஹெச்பி குரோம்புக் Intel Celeron மாடலை ரூ.20,900-விலையில் வாங்க முடியும். இந்த லேப்டாப் ஆனது14-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த ஹெச்பி குரோம்புக் Intel Celeron லேப்டாப்.

அதேபோல் 1.1ஜிகாஹெர்ட்ஸ் Intel Celeron என்4020 பிராசஸர், 4ஜிபி DDR4 ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப். மேலும் இன்டெல் யுஎச்டி 600 கிராபிக்ஸ் வசியுடன் வெளிவந்துள்ளது இந்த ஹெச்பி குரோம்புக் லேப்டாப்.

ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்

 3.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

3.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 Chromebook Intel Celeron N4020 14 மாடலை அமேசான் தளத்தில் ரூ20,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 1920 x 1080 பிக்சல், 220 நிட்ஸ் ப்ரைட்னஸ், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ், குரோம் ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் Intel Celeron N4020 பிராஸசர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லெனோவா லேப்டாப்.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் அல்டிமேட் பெர்ஃபார்மென்ஸை உறுதி செய்யும் ஒன்பிளஸ் 10டி 5ஜி!ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் உடன் அல்டிமேட் பெர்ஃபார்மென்ஸை உறுதி செய்யும் ஒன்பிளஸ் 10டி 5ஜி!

4.அவிட்டா SATUS ULTIMUS S111 லேப்டாப்

4.அவிட்டா SATUS ULTIMUS S111 லேப்டாப்

அவிட்டா SATUS ULTIMUS S111 லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.22,517-விலையில் வாங்க முடியும். இந்த லேப்டாப் 14.1-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் விண்டோஸ் 11 ஹோம் மூலம் இயங்குகிறது இந்த அவிட்டா லேப்டாப்.

Intel Celeron N4020 பிராசஸர், யுஎச்டி கிராபிக்ஸ், 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான லேப்டாப் மாடல்.

நீங்க நினைச்சு கூட பார்க்காத அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!நீங்க நினைச்சு கூட பார்க்காத அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

5.டெல் லேட்டிடியூட் இ5470

5.டெல் லேட்டிடியூட் இ5470

டெல் லேட்டிடியூட் இ5470 ஆனது 14-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இந்த டெல் லேப்டாப் மாடலை ரூ.24,500-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக டெல் லேட்டிடியூட் இ5470 லேப்டாப் ஆனது Intel Core i5 ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெல் நிறுவனம்.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

6.ஆசஸ் குரோம்புக்

6.ஆசஸ் குரோம்புக்

ஆசஸ் குரோம்புக் ஆனது Intel Celeron டூயல்-கோர் என்3350 பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 600 ஆதரவும் உள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஆசஸ் குரோம்புக் லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,890-விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம்,64ஜிபி ஸ்டோரேஜ், குரோம் ஓஎஸ், 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆசஸ் குரோம்புக் லேப்டாப் மாடல்.

7.ஏசர் அஸ்பைர் 3

7.ஏசர் அஸ்பைர் 3

ஏசர் அஸ்பைர் 3 லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,900- விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு AMD 3020e டூயல் கோர் பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

அதேபோல் 14-இன்ச் எச்டி டிஸ்பிளே ஆதரவு மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ், விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஏசர் லேப்டாப் மாடல்

Best Mobiles in India

English summary
Best Laptops under Rs 25,000 in India: Here's the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X