Home
Computer

ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்கள்: வாங்க பார்ப்போம்.!

மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை விட லேப்டாப்கள் தான் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக சில நிறுவனங்கள் மாணவர்களுக்குத் தகுந்த பல புதிய சிறப்பு அம்சங்களுடன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்கின்றன.

பட்ஜெட் விலையில் லேப்டாப்

அதுவும் பட்ஜெட் விலையில் லேப்டாப்களை அறிமுகம் செய்வதில் டெல், ஆசஸ், லெனோவா போன்ற பல நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான லேப்டாப் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.ஹெச்பி குரோம்புக் 14

1.ஹெச்பி குரோம்புக் 14

ஹெச்பி குரோம்புக் 14 லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.28,500-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் Intel Celeron N4020வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குரோம் ஓஎஸ் மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஹெச்பி குரோம்புக் 14 லேப்டாப் மாடல். 4ஜிபி எஸ்டி ரேம் மற்றும்64ஜிபி ஈஎம்எம்சி ஹார்ட் டிரைவ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.

ஹெச்பி குரோம்புக் 14 டிஸ்பிளே

ஹெச்பி குரோம்புக் 14 டிஸ்பிளே

மேலும் 14-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹெச்பி குரோம்புக் 14 மாடல். பின்பு கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 2.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

2.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,500-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் Intel Celeron N4020 பிராசஸர் வசதியுடன் குறைவான எடையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடல். அதேபோல் 14-இன்ச் எச்டி டிஸ்பிளே டிஸ்பிளே, 1366x768 பிக்சலஸ், 220 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா
லேப்டாப் மாடல்.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 பேட்டரி

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 பேட்டரி

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடலில் 45Wh பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா லேப்டாப் மாடல்.

3.ஆசஸ் விவோ புக் 15

3.ஆசஸ் விவோ புக் 15

ஆசஸ் விவோபுக் 15 லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.25,995-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 25ஜிபி ஸ்டோரேஜ்
ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப் மாடல். மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் Intel Celeron N4020 டூயல் கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் லேப்டாப்.
எனவே இயக்கத்திற்கு அpகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக டூயல் 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப்.

இதுதவிர 15.6-இன்ச் எல்இடி டிஸ்பிளே, 1366 x 768 பிக்சல்ஸ், விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், வைஃபை, புளூடூத் 4.1 போன்ற பல சிறப்பு
அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

 4.ஏசர் ஆஸ்பயர் 3

4.ஏசர் ஆஸ்பயர் 3

அமேசான் தளத்தில் ஏசர் ஆஸ்பயர் 3 லேப்டாப் மாடலின் விலை ரூ.31,955-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்திஇந்த லேப்டாப் மாடலை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

AMD Athlon Silver 3050Uடூயல்-கோர் பிராசஸர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். மேலும் AMD RadeonTM கிராபிக்ஸ், 4ஜிபி டிடிஆர்4 ரேம், 15.6-இன்ச் டிஸ்பிளே, 1டிபி ஹார்ட் டிஸ்க் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஏசர் லேப்டாப்.

 5.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 பிச்னஸ் லேப்டாப்

5.லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 பிச்னஸ் லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 பிச்னஸ் லேப்டாப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.23,790-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லெனோவா லேப்டாப் ஆனது Intel Celeron N4020 பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

மேலும் 11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே,250 நிட்ஸ் ப்ரைட்னஸ், விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், 4ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி, டால்பி ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள், வைஃபை 5, புளூடூத் 4.2 போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானலெனோவா லேப்டாப்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best laptop models under Rs 30,000: Here's the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X