Subscribe to Gizbot

விண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்

Posted By: Jijo Gilbert

விண்டோஸ் 10-யைக் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கான சிறந்த ஆன்டிவைரஸ் என்றால், அது அநேகமாக பிட்டிஃபென்டர் எனலாம்.

விண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்

கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர்களுக்கான எதிரான பாரம்பரியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அளிப்பது ஒரு ஆன்டிவைரஸ் எனலாம். ஆனால் அந்தப் பட்டியலில் ஒரு சிறந்த ஆன்டிவைரஸ் என்ற பெயரை இது பெறுகிறது. இது சிறந்த பாதுகாப்பை அளிப்பதோடு, பாஸ்வேர்ட் நிர்வாகம், ரன்ஸோவோர் பாதுகாப்பு, கோப்பு ஷ்ரீடர் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்கி உங்களுக்கு ஏற்ற முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது.

ஸ்கேன் செய்யும் சாதாரணமான பணிகளை விட, பிட்டிஃபென்டர் மூலம் நிகழ்நேர பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதன்மூலம் அளிக்கப்படும் சிறந்த அம்சங்களால், விண்டோஸ் 10-க்கான சிறந்த ஆன்டிவைரஸ் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

ஒரு சுமூகமான ஒத்து போகும் தன்மை மூலம் பிட்டிஃபென்டர், அழகியியலில் திருப்தி அளிப்பதாக உள்ளது. விண்டோஸ் 10 இல் உள்ள தீம்களுடன் சிறப்பான முறையில் இது பொருந்துவதால், பொதுவான விண்டோஸ் அப்ளிகேஷன்களில் ஒன்றைப் போல காட்சி அளிக்கிறது. எளிய இன்டர்பேஸ் மூலம் மென்பொருளில் நேவிகேஷன் எளிதாகிறது.

மெனுவில் உள்ள அனைத்தும் சிறப்பாக பெயரிடப்பட்டு, உள்ளுணர்வுடன் அமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் உள்ள ஒரு பேனல் மூலம் முக்கிய நேவிகேஷனை திறக்க முடியும். ஒவ்வொரு தொகுதியும் அசுர வேகத்தில் ஏற்றம் பெறும் வகையில், இது ஒரு கச்சிதமான பதிலளிப்பு அப்ளிகேஷன் ஆகும்.

ஒரு ஆன்டிவைரஸ் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் மீது பாதுகாப்பு கிடைக்கும் என்பது உண்மைத்தான். ஆனால் அது எந்தளவிற்கு சிறப்பான முறையில் கிடைக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ்கள் மற்றும் மால்வேர்களிடம் இருந்து பாதுகாப்பதை தவிர, பிட்டிஃபென்டர் மூலம் மோசடி செய்து உங்கள் முக்கிய பாஸ்வேர்ட்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கும் மோசடியாளர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

பிட்டிஃபென்டரின் இணைய பாதுகாப்பு, ஆன்டிவைரஸிற்கான சிறந்த சேவைகளில் ஒன்று எனலாம். உங்கள் தேடல் தீர்வுகளிலேயே தீங்கு விளைவிக்கக்கூடிய இணைப்புகளை இது சுட்டிக் காட்டி விடுகிறது. மால்வேருக்கான ஒரு முழுமையான மற்றும் விரைவான ஸ்கேனை செய்கிறது.

எந்தொரு புதிய மாற்று ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை துவக்கினாலும் மீட்பு முறையில் செயல்படும் பிட்டிஃபென்டர், உங்கள் கம்ப்யூட்டரை ரீபூட் செய்வது ஒரு தனித்துவம் மிகுந்த அம்சம் ஆகும். மிகவும் வலுவான மால்வேரை கூட எதிர்த்து செயல்படுவதில் இது ஒரு சிறந்த அம்சமாகும். மேலும் இது, பாதுகாப்பு பாதிப்புகள் குறித்தும் உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கிறது.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

பிட்டிஃபென்டரின் கூடுதல் அம்சங்கள் பின்வருமாறு:

• பாதுகாப்பற்ற ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தும் போது, பயனருக்கு எச்சரிக்கிறது.

• உங்கள் நெட்வர்க் உடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் பாதுகாப்பை நீங்கள் பரிசோதிக்கலாம்.

• உங்கள் ஆவணங்களில் அங்கீகாரமற்றவர்களின் நுழைவை தடுத்து, ரன்ஸோவேர் பாதுகாப்பை அளிக்கப்படுகிறது.

• எளிய பாஸ்வேர்டு நிர்வாகத்தை உங்களுக்கு அளிக்கிறது.

• உறுதியான பிரவுஸரான பிட்டிஃபென்டரின் ஸெஃப்பே அம்சத்தின் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றங்களைச் செய்யலாம்.

• ஃபைல் ஷ்ரீடர் அம்சத்தைப் பயன்படுத்தி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை நிரந்தரமாக நீக்க முடியும்.

விலை

விலை

பிட்டிஃபென்டர் டோட்டல் செக்யூரிட்டி 2018-யை, ஒரு ஆண்டிற்கு ரூ.2,499 செலுத்தி பெறலாம். இந்த பேக்கேஜ், 5 சாதனங்களுக்கான பாதுகாப்பு தீர்வைக் கொண்டிருக்கும். தற்போது சந்தையில் கிடைக்கும் மற்ற பிரபல ஆன்டிவைரஸ்களின் விலையுடன், இதன் விலை ஒத்து போகிறது. இதை வாங்கும் முன் இலவச அல்லது சோதனை பதிப்பை முதலில் முயற்சித்து பார்க்கலாம்.

போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!

Oppo F5 Sidharth Limited Edition Unboxing (TAMIL)
முடிவுரை

முடிவுரை

வெறும் வைரஸிற்கு எதிரான சாதாரண பாதுகாப்பு, நமக்கு பயன்படுவதில்லை. ஏனெனில் நம் கம்ப்யூட்டருக்குள் வைரஸ்கள் மற்றும் மால்வேர்களைச் செலுத்துவதற்கு எண்ணற்ற வழிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மக்களை எளிதாக ஏமாற்றும் மோசடி, தீங்கு விளைவிக்கக்கூடிய இணையதளங்கள் என்ற பல உள்ளன. எனவே விண்டோஸ் 10-க்கு ஒரு முழுமையான பாதுகாப்பு பேக்கேஜ்ஜை வழங்கும் சிறந்த ஆன்டிவைரஸ் என்றால், அது பிட்டிஃபென்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Providing traditional protection against virus and malware can make an antivirus good, but it takes much more than that to label an antivirus as the ‘best antivirus.’

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot