Home
Computer

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

By Keerthi

இணையம் என்ற ஒன்று வந்தபிறகு அதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் கெடுதலும் அதிகம் காணப்படுகின்றது.

அந்த நம் கம்பியூட்டரில் மிக எளிதாக வைரஸ் அல்லது மால்வேர் ப்ரோகிராம்கள் நுழைந்து விடுகின்றன இவை நமது கம்பியூட்டருக்கு அதிகம் கெடுதலைதான் உண்டாக்குகின்றது.

அந்த வகையில் உங்கள் கம்பியூட்டருக்கு ஏற்ற ஆன்ட்டி வைரஸ் எது என்று உங்களுக்கு தெரியுமா இதோ இவைதான் உங்களது கம்பியூட்டருக்கு ஏற்ற ஆன்ட்டி வைரஸ் பாஸ்.

இந்த ஆன்ட்டி வைரஸ் தொகுப்பினை நீங்கள் வைத்திருந்தால் உங்கள் கம்பியூட்டர் மிக பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.

இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும்.

இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது.

இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று.

வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம்.

ஆன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது. நம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பாப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை.

இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோ கிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது.

நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது.வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X