Home
Computer

பீட்டெல் மேஜிக்கின் பதிலியாக வரும் பீட்டல் மேஜிக் II

By Super
பீட்டெல் மேஜிக்கின் பதிலியாக வரும் பீட்டல் மேஜிக் II
இந்தியா மற்றும் உலக சந்தைகளில் பீட்டெல் நிறுவனம் மெதுவாக அதே நேரத்தில் உறுதியாக தனது தயாரிப்புகள் மூலம் முன்னேறி வருகிறது. ஆண்ட்ராய்டு வந்த நேரத்தில் பீட்டெல் சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று இருந்தது. இப்போது பீட்டல் 2 மாதங்களுக்கு முன்பு தனது பீட்டெல் மேஜிக்கிற்கு பதிலாக பீட்டெல் மேஜிக் II டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பீட்டெல் மேஜிக் II பல புதிய சிறப்பு அம்சங்களுடன் வந்திருக்கிறது. அதாவது இதன் பழைய மேஜிக்கில் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் இருக்கும் ஆனால் இதில் 786 மெகா ஹெர்டஸ் க்வல்காம் சினாப்ட்ராகன் ப்ராசஸர் உள்ளது. அதுபோல் இது 8ஜிபி எஸ்டி கார்டுடன் வருகிறது. ஆனால் பழையதில் 8ஜிபி இண்டர்னல் மெமரி மட்டுமே இருந்தது. மேலும் புதியதில் 16ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரி சேமிப்பும் உள்ளது.

பீட்டெல் மேஜிக் II கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் டபுள்யுவிஜிஎ தொடுதிரை டிஸ்ப்ளே 7 இன்ச் அளவு கொண்டது. மேலும் இது இந்த டேப்லட்டை வைக்க ஸ்டேண்டும் வழங்குவதால் கீறல்களிலிருந்து இந்த டேப்லட்டை எளிதாக பாதுகாக்கலாம். மேலும் இது வைபை மற்றும் ப்ளூடூத் வசதியும் கொண்டுள்ளது. மேலும் இதில் 2ஜி மற்றும் 3ஜி வசதிகள் உள்ளதால் 3ஜியில் ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஆனந்தமாக இருக்கும். மேலும் இதன் தொடு தளமும் மிக அம்சமாக உள்ளது.

பீட்டெல் மேஜிக் IIன் கேமராவைப் பொருத்தவரை இது 2 மெகா பிக்சல் ரியர் கேமராவையும் அதே நேரத்தில் 2 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது. மேலும் இது லித்தியும் ஐயன் 2200எம்எஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மேலும் இதிலுள்ள வீடியோ ப்ளேயர் மிகவும் தரம் வாய்ந்தது. அடுத்ததாக இதில் யுஎஸ்பி இணைப்பும் உள்ளது. மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த பீட்டல் மேஜிக் IIலிருந்து ஆன்ட்ராய்டு சந்தையை பார்க்க முடியும்.

பீட்டெல் மேஜிக் IIன் விலை ரூ.9799 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. பழையதின் விலை ரூ.9999 ஆகும். இந்த டேப்லட் கண்டிப்பாக அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X