Home
Computer

இ-ரீடருக்கு முக்கியத்துவம் தரும் புதிய டேப்லெட்டுகள்

By Karthikeyan
இ-ரீடருக்கு முக்கியத்துவம் தரும் புதிய டேப்லெட்டுகள்

பேர்னஸ்&நோபிள் இன்க் நிறுவனம் சமீபத்தில் இரண்டு உயர் ரக டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுகளுக்கு நூக் எச்டி மற்றும் நூக் எச்டி+ என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் இந்த டேப்லெட்டுகள் 199 முதல் 299 வரையிலான அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அதாவது 9ஜிபி மெமரி கொண்ட 7 இன்ச் நூக் எச்டி டேப்லெட் 199 அமெரிக்க டாலர்களுக்கும், அதே அளவு மெமரி கொண்ட 9 இன்ச் நூக் எச்டி+ டேப்லெட் 299 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றன.

ஆனால் இதே தரத்தில் வரும் மற்ற டேப்லெட்டுகளை விட இந்த நூக் டேப்லெட்டின் விலைகள் 2 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த டேப்லெட்டுகளில் மிக முக்கியமாக இ-ரீடர்கள் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் புக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் அமேசான் டேப்லெட்டுகளுக்கு இந்த புதிய டேப்லெட்டுகள் கடும் போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டேப்லெட்டுகளில் வீடியோவை இயக்குவதற்கும் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை பேர்னஸ் வைத்திருக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட்டில் ரீடிங் என்பது முக்கியமாக இருக்கும் என்று பேர்னஸின் தலைமை இயக்குனர் வில்லியம் லின்ச் கூறியிருக்கிறார்.

இந்த எச்டி டேப்லெட்டுகளின் விலை சற்று தூக்கலாக இருந்தாலும் கணிசமான அளிவ்ல விற்பனையாகும் என்று பேர்னஸ் நிறுவனம் நம்புகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X