குறைந்த விலையில் நூக் இபுக் ரீடர்!

By Super
|

குறைந்த விலையில் நூக் இபுக் ரீடர்!
புதிய நூக் இ-புக் ரீடர் டேப்வட்டினை சமீபத்தில் வழங்கியது பார்னெஸ் அண்டு நோபில் நிறுவனம். இந்த நூக் இ-புக் ரீடரின் விலையினை குறைத்துள்ளது பார்னெஸ் அண்டு நோபில் நிறுவனம்.

இதன் விலை பற்றி அறிவதற்கும் முன்பு இந்த இபுக் டேப்லட் என்னென்ன வசதிகளை கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

நூக் இ-புக் ரீடர் ஆன்ட்ராய்டு 2.1 இயங்குதளத்தினை கொண்டது. இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ-புக் ரீடர் மூலம் வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் எளிதாக பெற்று, பயனடைய முடியும்.

நூக் இ-புக் ரீடரின் முதல் ஜெனரேஷனை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த புதிய நூக் இ-புக் ரீடர் 35 சதவிகிதம் இலகு எடை கொண்டதாக உள்ளது. இதில் 16 ஜிபி மாடலுக்கு ரூ. 13,798 விலையிலிருந்து ரூ. 11,027 வரை விலையை குறைத்துள்ளது. நூக் இ-புக் ரீடர் டேப்லட்டில் மூன்று மாடல்களுக்கு பார்னெஸ் மற்றும் நோபில் நிறுவனம் விலை

குறைப்பு செய்துள்ளது.

இப்போது அமேசான் நிறுவனம் தனது புதிய கின்டில் ஃபையர் டேப்லட்டினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் இ-புக் மற்றும் இ-ரீடர் விற்பனையில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. இதனால் அமேசான் போன்ற நிறுவனத்துடன் போட்டி போட பார்னெஸ் அண்டு நோபில் போன்ற நிறுவனங்களும் தயாராகி வருகின்றது.

இதனால் இ-புக் ரீடர் வாடிக்கையாளர்களுக்கு, பார்னெஸ் மற்றும் நோபில் நிறுவனத்தின் புதிய நூக் இ-புக் ரீடர் டேப்லட்டிற்கு வழங்கும் இந்த விலை குறைப்பு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X