அமேசான் கின்டில் பயரை வீழ்த்துமா புதிய நூக் டேப்லெட்?

Posted By: Karthikeyan
அமேசான் கின்டில் பயரை வீழ்த்துமா புதிய நூக் டேப்லெட்?

நூக் டேப்லெட் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது அது சற்று தடிமனாக இருந்ததால் பார்ப்பதற்கு மிக அழகாக இல்லை. ஆனால் புதிதாக வந்திருக்கும் புதிய நூக் டேப்லெட் பழையதை விட மிகக் குறைந்த எடையில் அதாவது 35 சதவீதம் எடை குறைந்து வருகிறது.

புதிய நூக் டேப்லெட் கைகளுக்கு வரும் போது பழையவற்றுக்கும் இந்த புதிய நூக் டேப்லெட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்றாக உணர முடியும். புதிய நூக் டேப்லெட் எடை குறைவாக இருப்பதால் அதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதே நேரத்தில் புதிய நூக் டோப்லெட் தொடுதிரை கொண்டிருப்பதால் அதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.

சமீபத்தில் பர்னஸ் அன்ட் நோபிள் நிறுவனம் புதிய நூக் டேப்லெட்டை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்து. மேலும் சமீபத்தில் வந்த நியூயார்க் டைம் பத்திரிக்கை பர்னஸ் அன்ட் நோபிள் மற்றும் அமேசான நிறுவனங்களுக்கிடையே உள்ள மறைமுகப் போரைப் பற்றி விவரித்திருந்தது.

அந்த பத்திரிக்கைச் செய்தியின் படி அமேசானுக்கு சரியான விதத்தில் போட்டி போட வேண்டும் என்பதற்காக பர்னஸ் நிறுவனம் தனது புதிய நூக் டேப்லெட்டை களமிறக்குகிறது. சிலிகான் வேலியில் இந்த டேப்லெட்டின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐந்தாவது இ-ரீடிங் டிவைஸ் இந்த ஆண்டு வசந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இவை பர்னஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியால் அறிவிக்கப்பட்டது.

நூக் டேப்லெட்டை மறு பரிசீலனை செய்வதற்கு இது தகுந்த நேரம் என்று பர்னஸின் தலைமை இயக்குநர் கூறுகிறார். புதுப்பிக்கப்பட்ட நூக் டேப்லெட் கடந்த நவம்பரில் விற்பனைக்கு வந்தது. அதன் விலை 12,500ஆக குறைக்கப்பட்டது.

ஆனால் அமேசானின் கின்டில் பயர் 10000 ரூபாய்க்கு வந்தது. அதனால் டிசம்பரில் கின்டில் பயரின் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த வாரம் வரை 6 மில்லியன் கின்டில் பயர் டேப்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதனால் புதிய நூக் டேப்லெட் வரும் போது இன்னும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot