Home
Computer

பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஓர் புதிய டேப்லெட்!

By Karthikeyan
பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஓர் புதிய டேப்லெட்!

பர்னஸ் அண்ட் நோபிள் நிறுவனம் ஒரு புதிய பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஒரு டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் மிகவும் எடை குறைந்த அதே நேரத்தில் மிகவும் அடக்கமான டேப்லெட் ஆகும். குறிப்பாக அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கும்.

பர்னசின் இந்த புதிய டேப்லெட் நூக் டேபிள் டேப்லெட் வரிசையில் வரும் 8ஜிபி வெர்சனாகும். நூக் டேபிள் டேப்லெட் ஒரு 16ஜிபி வெர்சன் கொண்ட டேப்லெட் ஆகும். இது அமேசான் கின்டில் பயர் டேப்லெட்டின் கடுமையான சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் நூக் டேபிள் டேப்லெட்டில் சேமிப்பு வசதிக்கான இடம் அதிகம் இருப்பதால் இதன் விலை ரூ.12000 ஆகும். ஆனால் கின்டில் பயரின் விலை ரூ.10000 மட்டுமே. அதனால் நூக் டேப்லெட் விற்பனையில் அதிகம் சாதிக்க முடியவில்லை.

அதனால் பர்னஸ் 8ஜிபி டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இதன் மூலம் இந்த டேப்லெட்டைக் குறைந்த விலைக்கு கொடுக்க முடியும். அதாவது கின்டில் பயரின் விலைக்கு சமமாக அல்லது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விலை குறைவாக இருந்தால் விற்பனையில் கண்டிப்பாக சாதனை படைக்கும் என்பது உறுதியாகும்.

இந்த புதிய டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே விவிட் வியூவ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் கண் கூசாமல் நீண்ட நேரம் இதைப் பார்க்க முடியும். இதன் ப்ராசஸர் டூவல் கோர் என்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். அதுபோல் இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த புதிய டேப்லெட் ஒரு சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தைத் தரும். அதற்கான அப்ளிகேசன்கள் இந்த டேப்லெட்டில் அதிகம் உள்ளன. இந்த புதிய நூக் டேப்லெட் விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X