ஐதராபாத் மாணவர்கள் உருவாக்கிய புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

இந்த வரிசையில் ஐதராபாத்தைச் சேர்ந்த சிமன் பிரகாஷ் மற்றும் நிகில் என்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் ஆன்ட்ராய்டு வசதிகொண்ட புதிய டேப்லெட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இருவரில் சிமன் பொறியியில் முதல் ஆண்டு மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய டேப்லெட் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டேப்லெட்டுக்கு ஏவ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லட் உலகத்தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் குறைந்த விலை டேப்லெட்டாக கருதப்படும் ஆகாஷ் டேப்லெட்டுக்குப் பிறகு இந்த ஏவ் டேப்லட் இந்தியாவில் தயாராகி மலிவு விலைக்கு வரும் என்று தெரிகிறது. முதல் மாதத்திலேயே 1 லட்சம் ஏவ் டேப்லெட்டுகள் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த டேப்லெட்டை இங்கிலாந்தை சேர்ந்த சாரதி டெக்னாலஜிஸ் லிமிடெட் (எஸ்டி) என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்த டேப்லெட்டை உருவாக்கிய சிமனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களின் படி இந்த ஏவ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும். இது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸரை கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 7 இஞ்ச் திரையை கொண்டிருக்கும். இதன் இன்டர்னல் மெமரி 8ஜிபி ஆகும். ஆனால் இந்த மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதன் மொத்த எடை 360 கிராம்கள் மட்டுமே.
கேமார மற்றும் இதன் பேட்டரியைப் பற்றி இன்னும் எந்த தகவலும் வரவில்லை. ஆனால் இந்த ஏவ் டேப்லெட்டின் விலை ரூ.12,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications