விரைவில் அமேசானின் புதிய கிண்டில் பயர் டேப்லெட்டுகள்!

By Karthikeyan
|
விரைவில் அமேசானின் புதிய கிண்டில் பயர் டேப்லெட்டுகள்!

உலகமே கூகுளின் நெக்சுஸ் 7 டேப்லெட்டுக்காகக் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அமேசான் நிறுவனமும் கூகுளின் இந்த புதிய டேப்லெட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தனது அடுத்த காயை நகர்த்த முடிவெடுத்திருக்கிறது என்று என்பிடி டிஸ்ப்ளேசர்ச் தகவல் நிறுவனம் கூறுகிறது.

நெக்சுஸ் 7 டேப்லெட் வந்த பிறகு, அமேசான் தனது அடுத்த கிண்டில் பயர் டேப்லெட்டுகளைக் களமிறக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்று அந்த செய்தி கூறுகிறது. 4ஜி வசதியுடன் கூடிய 3 கிண்டில் பயர் 2 டேப்லெட்டுகளையாவது அமேசான் களமிறக்கும் என்று அந்நிறுவனம் அறுதியிட்டு கூறுகிறது.

குறிப்பாக கேமரா இல்லாத 7 இன்ச் அளவு கொண்ட கிண்டில் பயர் 2:1 டேப்லெட் வரும் ஆகஸ்டில் வர இருக்கிறது. அதோடு கேமராவுடன் கூடிய 7 இன்ச் அளவு கொண்ட கிண்டில் பயர் 2:1 டேப்லெட் வரும் ஆகஸ்டில் வர இருக்கிறது. மேலும் கேமரா மற்றும் 4ஜி வசதி கொண்ட 7 இன்ச் அளவு கொண்ட கிண்டில் பயர் 2:1 டேப்லெட் வரும் செப்டம்பரில் வர இருக்கிறது. இறுதியாக 8.9 இன்ச் அளவில் புதிய கிண்டில் பயர் டேப்லெட்டும் விரைவில் வர இருக்கிறது.

எனவே ஆப்பிளின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருந்து வரும் இந்த அமேசானின் கிண்டில் பயர் டேப்லெட்டுகள் வரும் கூகுளின் நெக்சுஸ் 7 டேப்லெட்டுக்கும் போட்டியாக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X