ஏசஸ் சென்புக் இந்தியாவில் ரூ.49,999க்கு கிடைக்கின்றது

Written By:

ஏசஸ் நிறுவனம் 13.3 இன்ச் லாப்டாப் ஒன்றை வெளியிட்டுள்ளது. க்யூஹெச்டி மற்றும் அல்ட்ரா போர்டபிள் லாப்டாப்பான இது 12.3 எம்எம் மெலிதாக இருக்கின்றதோடு இந்தியாவில் ரூ.49,999க்கு கிடைக்கின்றது. இந்த லாப்டாப் அனைத்து ஏசஸ் ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (15.05.2015) முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொருத்த வரை சென்புக் வெட்ஜ் ஷேப்பிடு வடிவமைப்பு மற்றும் உறுதியான அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்புக் இந்தியாவில் ரூ.49,999க்கு கிடைக்கின்றது

புதிய ஏசஸ் UX305 சரியாக 1.2 கிலோ எடை இருப்பதோடு ஆன்டி கிளேர் டிஸ்ப்ளே 3200*1800 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடும் போது இன்த டிஸ்ப்ளே ஐந்து மடங்கு சிறந்ததாகும்.

இன்டெல் கோர் M-5Y10 பிராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD (solid-state disk) சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்டிருக்கின்றது. எவ்வித வெளிச்சத்திலும் பயன்படுத்த ஏதுவான கீபோர்டு மற்றும் துள்ளியமான டச்பேடு வழங்கப்பட்டுள்ளது விண்டோஸ் 8.1 இயங்குதளங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

பேட்டரியை பொருத்த வரை 10 மணி நேரம் பேக்கப் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசஸ் சென்புக் ஏசஸ் ஐஸ்கூல் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மொத்தமாக மூன்று யுஎஸ்பி போர்ட், இதில் ஒரு போர்ட் ஏசஸ் சார்ஜரை சப்போர்ட் செய்வதோடு மொபைல் கருவிகளுக்கும் சார்ஜ் செய்ய அனுமதிக்கின்றது. மற்றொரு யுஎஸ்பி ஈத்தர்நெட் அடாப்டரை சப்போர்ட் செய்கின்றது.

 

English summary
Asus ZenBook UX305 now available in India. Asus ZenBook UX305 with Intel Core M processor now available in India at Rs 49,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot