உலகின் மிக மெல்லிதான லேப்டாப் விலை என்ன தெரியுமா?
இதன் அகலம் வெறும் 11.2 மிமீ மட்டுமே உள்ளது என்பதும் இதன் எடை வெறும் 1.2 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
தைவானை சேர்ந்த ஆசஸ் நிறுவனம், இந்தியாவில் கடந்த திங்களன்று உலகின் மிக மிக மெல்லிதான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப்ஸ் S UX370 என்ற மாடல் பெயரில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.1,30,990 மட்டுமே. இந்த லேப்டாப் நாட்டின் அனைத்து ஆசஸ் ஸ்டோர்களிலும் கிடைக்கும். ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 என்ற இந்த லேப்டாப் ஸ்டைலிஷ் மற்றும் பவர்புல் தினசரி தேவைகளுக்கு பயன்படும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஆசன்ஸ் பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் அர்னாட்ல் சூ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலின் முக்கிய விபரங்கள்
ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடல் லேப்டாப் 13.3 இன்ச் முழு HD டச் ஸ்க்ரீனுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஆசஸ் பெண் தன்மைக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. மேலும் இந்த லேப்டா 8வது தலைமுறை இண்டல்கோர் ஐ7-8550யூ வகை பிராஸசரை கொண்டது. மேலும் 16ஜிபி ரேம் மற்றும் விண்டோஸ் 10 ஓஎஸ் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அகலம் வெறும் 11.2 மிமீ மட்டுமே உள்ளது என்பதும் இதன் எடை வெறும் 1.2 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலில் எளிதில் உபயோக்கிகும் வகையிலான சுழலும் வகையிலான கீபோர்டு மற்றும் டச்பேட் டெக்னாலஜியும் உண்டு.

மேலும் இந்த லேப்டாப்பில் உலகின் மிகச்சிறந்த 360 டிகிரியில் செயல்படும் கீல்களால் பொருத்தபப்ட்டுள்ளது. இதனால் மிக எளிதாக, ஸ்மூத்தாக, கையாளும் வகையில் இருப்பது மட்டுமின்றி டிஸ்ப்ளேவின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. எந்த கோணத்தில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்

மேலும் இந்த மாடல் லேப்டாப்பில் HDMI போர்ட், யூஎஸ்பி 3.1 போர்ட், மற்றும் யூஎஸ்பி-C போர்ட் ஆகியவைகளுடன் எக்ஸ்டர்னல் போர்ட் ஆக 4K 4K UHD டிஸ்ப்ளேவும் உள்ளது. ஆசஸ் ஜென்புக் ஃபிலிப் S UX370 மாடலில் 39Wh பேட்டரி இருப்பதால் 11 மணி நேரம் இதனை எவ்வித தங்கு தடையும் இன்றி பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இதனை 60% அளவுக்கு சார்ஜ் செய்ய வெறும் 49 நிமிடங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications