Home
Computer

Asus நிறுவனத்தின் தரமான புதிய லேப்டாப்: முன்பதிவு தொடங்கியது.! என்ன விலை?

ஏற்கனவே நடந்து முடிந்த 2022 சிஇஎஸ் நிகழ்வில் ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போல்டபில் லேப்டாப்பிற்கான முன்பதிவு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.

ஓஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல்

ஓஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல்

குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம் குறிப்பாக இந்த போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஓஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக ஆசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்போது இந்த
லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

17-இன்ச் 2.5கே டிஸ்பிளே

17-இன்ச் 2.5கே டிஸ்பிளே

ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடலில் 17-இன்ச் 2.5கே டிஸ்பிளே உள்ளது. பின்பு இதனை மடிக்கும் போது 12.5-இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்

இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்

இந்த புதிய லேப்டாப் மாடலில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ஆதரவும் உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 16 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்.

 ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட்

ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட்

அதேபோல் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால் இந்த சாதனத்தைக் கணினி, டேப்லெட், லேப்டாப், புக் போன்ற ஏராளமான மோட்களில் பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ

விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ

குறிப்பாக US MIL-STD 810H ராணுவ தர வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப். அதேபோல் இந்த புதிய லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 5எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

5எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

இந்த புதிய ஆசஸ் லேப்டாப் 5எம்பி பிரைமரி கேமரா ஆதரவு மற்றும் IR அம்சத்தை கொண்டுள்ளது. அதேபோல்வைபை 6E, ப்ளூடூத் 5.2, 2x தண்டர்போல்ட் 4, x 3.5mm காம்போ ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப்.

75 வாட் ஹவர் பேட்டரி

75 வாட் ஹவர் பேட்டரி

75 வாட் ஹவர் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் லேப்டாப். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 65 வாட் ஏசி அடாப்டர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப்.

முன்பதிவு

முன்பதிவு

இந்த ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.2,84,290-விலையில் வாங்கிட முடியும். குறிப்பாக இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விற்பனை வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும். அதேபோல் இந்த லேப்டாப் மாடலுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக்மற்றும் ரூ.40,700 வரை எக்ஸ்சேன்ஜ் மதிப்பு வழங்கப்படுகிறது.

அதேபோல் இதை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.19,500 மதிப்புள்ள 500ஜிபி SSD மற்றும் ரூ.7600 மதிப்புள்ள வாரண்டி எக்ஸ்டென்ஷன் வழங்கப்படும். குறிப்பாக இதன் லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.3,29,900-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Asus Zenbook 17 Fold OLED laptop booking started in india: full details.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X