Home
Computer

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான புதிய லேப்டாப்: விலை மற்றும் அம்சங்கள்.!

அசுஸ் நிறுவனம் தொடர்ந்து அருமையான லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் லேப்டாப்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அசுஸ் நிறுவனம் புதிய அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 அசுஸ் ஜென்புக் 14எக்ஸ்

குறிப்பாக இந்த புதிய அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப் ஆனது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குகொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த லேப்டாப் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தசாதனத்தின் விலை $1,999 (இந்திய மதிப்பில் ரூ.1,52,600) ஆக உள்ளது.

சுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ்

புதிய அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப் மாடல் ஆனது விண்டோஸ் 11 ப்ரோவில் இயங்குகிறது. குறிப்பாக இந்த சாதனம் 14-இன்ச் 2.8கே டச்ஸ்கீரின் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் எச்டிஆர் ஆதரவு, 2,880x1,800 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானலேப்டாப்.

அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ்

இந்த அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப் ஆனது 12வது ஜெனரல் இன்டெல் கோர் i9-12900H பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் Intel Iris Xe கிராபிக்ஸ் மற்றும் 32GB LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1TB சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப்.

ட் வைஃபை 6இ, புளூடூத் வி5.2,

டூயல்-பேண்ட் வைஃபை 6இ, புளூடூத் வி5.2, தண்டர்போல்ட் 4 போர்ட்கள், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-ஏ போர்ட், எச்டிஎம்ஐ 2.0 போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், 3.5mm காம்போ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப்.

அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ்

அசுஸ் ஜென்புக் 14எக்ஸ் ஒஎல்இடி ஸ்பேஸ் எடிஷன் லேப்டாப் மாடலில் 720p வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 63Wh லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். பின்பு இதை சார்ஜ் செய்ய 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த சாதனம் 3.5-இன்ச் OLED

குறிப்பாக இந்த சாதனம் 3.5-இன்ச் OLED ஜென்விஷன் மோனோக்ரோம் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Asus ZenBook 14X OLED Space Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X