Home
Computer

8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்!

ஜென்புக் 14 லேப்டாப் மாடலுடன் வெளிவந்த ஜென்புக் 15 மற்றும் ஜென்புக் 13 மாடல்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அசுஸ் நிறுவனம் சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அதிகளவு அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜென்புக் 14 என்ற லேப்டாப் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் ஜென்புக் 14 லேப்டாப் மாடலுடன் வெளிவந்த ஜென்புக் 15 மற்றும் ஜென்புக் 13 மாடல்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்!

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் விலையைப் பொறுத்தவரை ரூ.74,990-ஆக உள்ளது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பெசல்-லெஸ் வடிவமைப்பு

பெசல்-லெஸ் வடிவமைப்பு

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.19கிலோ எடைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், பேட்டரி இன்டிகேட்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கீபோர்டு மற்றும் டிராக்பேட்:

கீபோர்டு மற்றும் டிராக்பேட்:

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் சாதனத்தில் பேக்லைட் கீபோரட் மற்றும் அசத்தலான டிராக்பேட் வசதியும் உள்ளது. இந்த அம்சங்கள் வீடியோ எடிட்டிங், மற்றும் பல்வேறு ஆன்லைன் வேலைகளுக்கு மிக அருமையாக செயல்படும். மேலும் டைப்பிங் செய்ய மிக எளிமையாக பயன்படுகிறது ஜென்புக் 14 லேப்டாப் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

ஜென்புக் 14 லேப்டாப் பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ7 செயலி யுஎச்டி கிராபிக்ஸ் 620ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி:

பேட்டரி:

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் மாடலில் 50வாட் லித்தியம் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது சுமார் 4மணி நேரம் பேட்டரி

பேக்அப் கொடுக்கிறது. இருந்தபோதிலும் இந்த சாதனத்தின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஜென்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக 14-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 92 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த திரை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட அதிக வெளிச்சத்துடன் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Asus Zenbook 14 Review: Sleeker, lighter and powerful: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X