அசுஸ் விவோபுக் X507 நோட்புக் இந்தியாவில் வெளியானது.!

ஏற்கனவே கூறியபடி அசுஸ் விவோபுக் X507 நோட்புக்குகள் எக்ஸ்குளூஸிவாக பேடிம் மாலில் மட்டுமே கிடைக்கும்.

|

அசுஸ் நிறுவனம் விவோபுக் X507 நோட்புக்கை இந்தியாவில் வெளியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. எடை குறைந்த வடிவமைப்பு மற்றும் கவரும் வகையிலான நானோஎட்ஜ் திரை கொண்ட, பட்ஜெட் விலையில் வெளியாகும் X507 நோட்புக்குகள் எக்ஸ்குளூஸிவாக பேடிம் மாலில் மட்டுமே கிடைக்கும்.

அசுஸ் விவோபுக் X507 நோட்புக் இந்தியாவில் வெளியானது.!


பேடிம் மாலுடன் நாங்கள் இணைந்து செயல்படுவது மிகவும் சிறப்பாக உள்ளது மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் லேப்டாப் சந்தையில், நம்பமுடியாத வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வெளியாகும் விவோபுக் x507 சிறப்பாக செயல்படும் என நம்புவதாக கூறியுள்ளரார் ஆசுஸ் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் லியோன் யூ.

வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தவும், செயல்படும் செயல்திறனை அதிகரிக்கவும் புதுமையான முயற்சிகளை பேடிம் உடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். இந்த கூட்டு முயற்சியின் மூலம் எங்கள் பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த டிஜிட்டல் நெட்வொர்க்கை தருகிறோம் என மேலும் கூறினார்.

அசுஸ் விவோபுக் 15 X507ன் விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்

ஏற்கனவே கூறியபடி அசுஸ் விவோபுக் X507 நோட்புக்குகள் எக்ஸ்குளூஸிவாக பேடிம் மாலில் மட்டுமே கிடைக்கும். ரூ21,990 தொடக்க விலையில் கிடைக்கும் இது அதன் பல்வேறு அம்சங்களை பொறுத்து ரூ38,990 வரை கிடைக்கிறது. பேடிம் மால் செயலியில் விவோபுக் X507 மாடல்களை வாங்கும் போது LAPTOP3000 என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தினால் ரூ3,100 கேஸ்பேக் தருகிறது பேடிம்.

அசுஸ் விவோபுக் X507 நோட்புக் இந்தியாவில் வெளியானது.!

அசுஸ் விவோபுக் 15 X507ன் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

மெல்லிசான வடிவமைப்புள்ள 15.6 இன்ச் நானோஎட்ஜ் 1920×1080 முழு எச்.டி திறன் கொண்ட திரையுடன் வெளியாகிறது ஆசுஸ் விவோபுக் X507. 6ம் தலைமுறை இன்டெல் கோர் i3 6006U இயக்கியுடன் 8GB DDR4 ரேம் மற்றும் 1TB 5400RPM SATA HDD யும் உள்ளது. அதிக விலையுயர்ந்த அம்சமான NVIDIA GeForce MX110 கிராப்பிக்ஸ் உள்ளது. இணைப்புகளை பொறுத்தமட்டில் 802.11 b/g/n வைபை,ப்ளூடூத் 4.0, 2x USB 2.0 போர்ட் மற்றும் 1x USB 3.0 போர்ட் உள்ளன.

இதர அம்சங்களை பொறுத்தவரை, பிங்கர்பிரிண்ட் சென்சார், விண்டோஸ் ஹலோவின் ஒன் டச் லாகின்,பாஸ்ட் சார்ஜ், ஆசுஸ் சானிக்மாஸ்டர் தொழில்நுட்பத்துடன் உள்ள 2W ஸ்பீக்கர்கள், பயாஸ் பூட் செய்யும் போது பாஸ்வேர்ட் பாதுகாப்பு போன்றவை உள்ளன. வெறும் 49 நிமிடத்தில் 60% சார்ஜ் ஆகும் இது சூப்பர் பேட்டரி என்கிறது அசுஸ் நிறுவனம். மற்ற மலிவு விலை 15.6 இன்ச் நோட்புக்குகளை போல இல்லாமல், அசுஸ் விவோபுக் X507 வெறும் 1.68கிலோ எடை கொண்டது.

Best Mobiles in India

English summary
ASUS VivoBook X507 Notebook Range Launched in India: Price, Features, Specs; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X