14-இன்ச் டிஸ்பிளேவுடன் ஆசுஸ் விவோபுக் எஸ்14 அறிமுகம்.!
ஆசுஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் மாடல் 14-இன்ச் முழு எச்டி நானோ எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஆசுஸ் விவோபுக் லேப்டாப் மாடல்.
ஆசுஸ் நிறுவனம் தற்சமயம் அசத்தலான விவோபுக் எஸ்14 (எஸ்410யுஏ) லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இன்று முதல் ஃப்ளிப்கார்ட்டில் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசுஸ் விவோபுக் எஸ்14 (எஸ்410யுஏ) லேப்டாப் மாடல் 3வகைகளில் கிடைக்கிறது, அதவாது 7வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 மாடல் மற்றும் 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5, கடைசியாக 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 எனற் வகைகளில் கிடைக்கும்.
இந்திய கணினி சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஆசுஸ் விவோபுக் லேப்டாப் மாடல். மேலும் டெல்நிறுவனத்திற்கு போட்டியாக இந்த ஆசுஸ் விவோபுக் எஸ்14 (எஸ்410யுஏ) லேப்டாப் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

டிஸ்பிளே:
ஆசுஸ் விவோபுக் எஸ்14 லேப்டாப் மாடல் 14-இன்ச் முழு எச்டி நானோ எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஆசுஸ் விவோபுக் லேப்டாப் மாடல்.

ட்ரூ 2 லைஃப்:
இந்த ஆசுஸ் விவோபுக் எஸ்14 சாதனம் பொறுத்தவரை ட்ரூ 2 லைஃப் வீடியோ தொழில்நுட்பத்துடன் வருகிறது, அதன்படி துள்ளியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்க முடியும். இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்துப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 10:
விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் டச்பேட் கைரேகை சென்சார்,
விண்டோஸ் ஹலோ தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
யுஎஸ்பி 3.1 டைப்-சி போர்ட், யுஸ்பி 3.1 போர்ட், யுஸ்பி 2.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், வைஃபை, ப்ளூடூத் 4.2. போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஆசுஸ் விவோபுக் எஸ்14 சாதனம்.

ஆடியோ:
மேலும் இந்த் லேப்டாப்பின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவெனில் ஹார்மன் கார்டோன் சர்டிபிகேட் பெற்ற ஆடியோ டெக்னாலஜி இதில் உள்ளது. இதில் இரண்டு ஸ்பிக்கர்கள் மற்றும் 8சிசி ஆடியோ சேம்பர் மற்றும் ஸ்மார்ட் ஆப்ளிஃபையர் ஆகியவை உள்ளது.


விலை:
விவோபுக் எஸ்14 (எஸ்410யுஏ) லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.54,990 முதல் தொடங்குகிறது. மேலும் இந்த லேப்டாப் மாடல் பற்றிய பல்வேறு
விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications