ஆசஸ் விவோபுக் மேக்ஸ் எக்ஸ்541 : 15.6-இன்ச் டிஸ்பிளே.!
ஆசஸ் விவோபுக் மேக்ஸ் எக்ஸ்541 : முக்கிய சிறப்பு அம்சம் என்னவெனில் ஹார்மன் கார்டோன் சர்டிபிகேட் பெற்ற ஆடியோ டெக்னாலஜி இதில் உள்ளது.
ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றின் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆசஸ் நிறுவனம் தற்போது புதிய வகை லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது, இவற்றில் புதிய பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசஸ் அதன் மூன்றாம் தலைமுறை பிரதான நோட்புக் ஒன்றை அறிமுகப்படுத்தியது, இது இந்திய சந்தையில் விவோபுக் மேக்ஸ் எக்ஸ்541 என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய மடிக்கணினி விலை பொருத்தமாட்டில் ரூபாய்.31,990 ஆக உள்ளது.
சாக்லேட் பிரவுன், ரெட், சில்வர் க்ரிடியன், அக்வா ப்ளூ, வைட் போன்ற நிறங்களில் விவோபுக் மேக்ஸ் எக்ஸ்541 லேப்டாப் கிடைக்கிறது,மேலும் இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
ஆசஸ் விவோபுக் மேக்ஸ் எக்ஸ்541 ஒரு 15.6 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (1080-1920) வீடியோ பிக்சல்காட்சி இவற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்டெல்எச்டி ஐ3-7100யு செயலி, இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 620 மற்றும் 4 ஜிபி டிடிஆர்4 2400எம்எச், செட் ரேம் இதனுள் அடக்கம். 12ஜிபி ரேம் வரை விரிவாக்கக்கூடிய வசதி இதனுள் அடக்கம்.
மேலும் இந்த் லேப்டாப்பின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவெனில் ஹார்மன் கார்டோன் சர்டிபிகேட் பெற்ற ஆடியோ டெக்னாலஜி இதில் உள்ளது. இதில் இரண்டு ஸ்பிக்கர்கள் மற்றும் 8சிசி ஆடியோ சேம்பர் மற்றும் ஸ்மார்ட் ஆப்ளிஃபையர் ஆகியவை உள்ளது.
நோட்புக்குகள் ஆசஸ் சோனிக்மேஸ்டர் உள்ளிட்ட சில மேம்பட்ட ஆடியோ தொழில்நுட்பங்களுடன் வருகிறது, இது வன்பொருள், மென்பொருளின் கலவையாகும் மற்றும் தெளிவான மற்றும் அதிவேக ஒலி வெளியீட்டை வழங்குகிறது இந்த லேப்டாப். ஆசஸ் ட்ரூ 2 லைஃப் வீடியோ தொழில்நுட்பம் 200 சதவிகிதம் கூர்மையான காட்சியமைப்பை வழங்குகிறது.
அதே நேரத்தில் சூப்பர்பட் தொழில்நுட்பமான ஆசஸ் விவோபுக் மேக்ஸ பேட்டரி நீண்ட நாள் ஆயுள் வழங்குகிறது. ஜிபிஎஸ், யுஎஸ்பி 3.1, யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி 2.0 மற்றும் விஜிஏ, எச்டிஎம்ஐ போர்ட்கள் இதனுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications