கம்ப்யூட்டெக்ஸ் கண்காட்சியில் ஆசஸ் டேப்லட்கள்!

Posted By: Staff
கம்ப்யூட்டெக்ஸ் கண்காட்சியில் ஆசஸ் டேப்லட்கள்!
ஆசஸ் நிறுவனம் புதிதாக இரண்டு டேப்லட்களை அறிமுகம் செய்கிறது. டேப்லட்-600 மற்றும் டேப்லட்-810 என்ற பெயர்களை கொண்ட இந்த 2 டேப்லட்களும் சிறப்பான தொழில் நுட்பத்தினை கொடுக்கும். டேப்லட்-600 விண்டோஸ் ஆர்டி இயங்குதளத்தில் இயங்கும்.

இந்த டேப்லட் டெக்ரா-3 குவாட் கோர் பிராசஸரையும் கொண்டுள்ளது. டேப்லட்-810 விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும். கூடுதல் தொழில் நுட்பங்களை வழங்கும் இன்டெல் ஏட்டம் பிராசஸர் வசதியினை கொண்டது.

டேப்லட்-600 2 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும், டேப்லட்-810 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும் கொடுக்கும்.

இந்த 2 டேப்லட்களின் திரையின் அளவினையும் தெரிந்து கொள்ளவது அவசியமாகிறது. டேப்லட்-600 10.1 இஞ்ச் திரையினையும், டேப்லட்-810 11.6 இஞ்ச் திரையினையும் இந்த டேப்லட்டில் பெறலாம்.

ஆசஸின் இந்த டேப்லட்களில் சூப்பர் ஐபிஎஸ் திரையின் மூலம் 1366 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இந்த இரண்டு புதிய டேப்லட்கள் பற்றி அதிகமாக எந்த தொழில் நுட்ப விவரங்களும் வெளியாகவில்லை.

இன்று துவங்கும் கம்ப்யூட்டெக்ஸ் தொழில் நுட்ப சாதன கண்காட்சியில் ஆசஸ் டேப்லட்களின் இந்த இரண்டு டேப்லட்களும் அறிமுகமாக உள்ளது. அதன் பிறகு இந்த டேப்லட்களின் தொழில் நுட்பங்களை பற்றிய விவரங்களை தெளிவாக பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்