இலகு எடையுடன் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தும் ஆசஸ்

Posted By: Staff

இலகு எடையுடன் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தும் ஆசஸ்
இந்த நவீன உலகில் லேப்டாப் மற்றும் நோட்புக்குகள் இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவை நமது வாழ்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. தொடக்க காலங்களில் தடிமனான நோட்புக்குகளின் செயல் திறன் அந்த அளவிற்கு இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்த காலம் இப்போது மலை ஏறிவிட்டது. காரணம் ஆசஸ் யு36எஸ்டி லேப்டாப்பின் அறிமுகமாகும். இந்த நோட்புக்கின் தடிமனைப் பார்த்தால் அது வெறும் 19மிமீ மட்டுமே. மேலும் இதன் இன்டல் சிபியு கொண்டுள்ளது.

இதன் என்விடியா ஆப்டிமஸ் தொழில் நுட்பம் விரைவான அதே நேரத்தில் தரமான செயல் திறனை வழங்குகிறது.
இதன் எடை 1.4 கிலோ மட்டுமே. மேலும் இதன் 4 செல் பேட்டரி நீண்ட நேரம் தாங்கக்கூடியவை. அதனால் இந்த நோட்புக் மற்ற நோட்புக்குகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என நம்பலாம்.

ஆசஸ் யு36எஸ்டி லேப்டாப் வீடியோ மேஜிக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் எல்சிடி டிஸ்பிளேயில் வீடியோ மிக பக்காவாக தரமாக இருக்கும். அந்த அளவிற்கு இதன் டிஸ்ப்ளே பேனல் தரமான தெளிவை வழங்கும். அதுபோல் ஆசஸ் இந்த லேப்டாப்புக்கு முதல் 3 மாத இலவச சர்வீஸ் வழங்குகிறது.

அதுபோல் 3 மாதத்திற்குள் இந்த லேப்டாப்பில் ஏதாவது பிரச்சினை வந்தால் இந்த லேப்டாப்பை திருப்பிக் கொடுத்து விடலாம். ஆனால் இந்த வசதி நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ஆசஸின் டீலர்களை அணுகினால் இதுகுறித்த விபரங்களை பெறலாம்.

ஆசஸ் யு36எஸ்டி லேப்டாப் இன்டல் கோர் ஐ7 2620எம் பிராசஸர் கொண்டு விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது இன்டல் எச்எம்65 எக்ப்ரஸ் சிப்செட் கொண்டு டிடிஆர்3 1333 எம்ஹெர்ட்ஸ் எஸ்டிஆர்எஎம் மெமரி கொண்டுள்ளது. இதன் மெமரியை 2X எஸ்ஒ-டிஐஎம்எம் சாக்கெட் மூலம் 8ஜி எஸ்டிஆர்எஎம் வரை விரிவுபடுத்த முடியும்.

இதன் பேனல் டிஸ்ப்ளே 13.3 ஆகும். மேலும் இது 16:9 எச்டி கொண்டு எல்இடி பேக்லைட்டும் கொண்டு தரமான படங்களை வழங்கும். இதன் 0.3 மெகா பிக்சல் வெப் கேமரா மூலம் சாட்டிங் மற்றும் வியாபார தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.

அதுபோல் இது மைக்ரோபோன்கள் மற்றும் ஆல்டெக் லேன்சிங் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளன. அதுபோல் 10 வரையான பேட்டரி பேக்கப்பும் உள்ளன. ஆசஸ் யு36எஸ்டி லேப்டாப் 2 வருட ஹார்ட்வேர் உத்திரவாதமும் அதுபேல் 1 வருட பேட்டரி பேக் உத்திரவாதமும் கொண்டு வருகிறது. இந்த நோட்புக் குறைவான எடையுடன் எஎல்-எம்ஜி அலாய் கொண்டு வருகிறது. ஆசஸ் யு36எஸ்டி லேப்டாப்பின் விலை ரூ.31,500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot