கேமிங்-க்கு என்றே மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த அசுஸ்.!
அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டாப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டாப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
அசுஸ் நிறுவனம் தனது TUF சீரிஸ் வரிசையில் FX505 மற்றும் FX705 என்ற இரண்டு புது மாடல் கேமிங் லேப்டாப்களுடன் சேர்ந்து புதிய கேமிங் பி.சி (கம்ப்யூட்டர்) FX10CP மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அசுஸ் TUF சீரிஸ் விற்பனை
அசுஸ் TUF சீரிஸ் கேமிங் லேப்டாப்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையில் கிடைக்குமென்றும் அசுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் TUF-FX10CP கேமிங் பி.சி ஆன்லைன் சந்தையில் கிடைக்காதென்றும், வெறும் ஆப்லைன் கடைகளில் மட்டுமே கிடைக்குமென்றும் அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசுஸ் கேமிங் லேப்டாப் விலை
அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டாப் இந்தியாவில் ரூ.79,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்றும், அதேபோல் TUF-FX705 கேமிங் லேப்டாப் ரூ.1,24,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று அசுஸ் நிறுவனம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் புதிய TUF-FX10CP கேமிங் பி.சி ரூ.91,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டாப் விபரக்குறிப்பு:
அசுஸ் TUF FX505 கேமிங் லேப்டாப் விபரக்குறிப்பு:
- 15.6' இன்ச் முழு எச்.டி இ.பி.எஸ் ஆன்டி கிளேர் டிஸ்பிளே
- 60Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் மற்றும்
- 144Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட்
- 8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர்
- NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1050 1050Ti or a GTX 1060 ஜிபியு கொண்ட 6ஜிபி கிராபிக்ஸ் மெமரி
- 32 ஜிபி ரேம் மற்றும் 1டிபி SATA HDD அல்லது 512GB PCIe SSD ஸ்டோரேஜ்
நிறம்: கோல்டு ஸ்டீல், ரெட் மேட்டர் மற்றும் ரெட் பியூஷன்
விலை: ரூ.79,990

அசுஸ் TUF-FX705 கேமிங் லேப்டாப் விபரக்குறிப்பு:
-17.3' இன்ச் முழு எச்.டி இ.பி.எஸ் ஆன்டி கிளேர் டிஸ்பிளே
- 60Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட் மற்றும்
- 144Hz ரெப்பிரேஷ் ரேட் வேரியண்ட்
- 8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர்
- NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1050 1050Ti or a GTX 1060 ஜிபியு கொண்ட 6ஜிபி கிராபிக்ஸ் மெமரி
- 32 ஜிபி ரேம் மற்றும் 1டிபி FireCuda SSHD ஸ்டோரேஜ்
நிறம்: கோல்டு ஸ்டீல் மற்றும் ரெட் மேட்டர்
விலை: ரூ.1,24,990

அசுஸ் TUF-FX10CP கேமிங் பி.சி விபரக்குறிப்பு:
- 8 ஆம் ஜென் இன்டெல் கோர் i7-8700 பிராசஸர்
- NVIDIA ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1050 ஜிபியு
- 16ஜிபி DDR4 ரேம் மற்றும் 1டிபி ஹார்டிரைவ் அல்லது 512ஜிபி SSD
விலை: ரூ.91,990


Click it and Unblock the Notifications