Home
Computer

ஆசஸ் டேப்லெட்டுக்கு அதிகாரப்பூர்வமான அன்லாக்கிங் டூல்!

By Karthikeyan
ஆசஸ் டேப்லெட்டுக்கு அதிகாரப்பூர்வமான அன்லாக்கிங் டூல்!

பல டேப்லெட் வாடிக்கையாளர்கள் தங்களது டேப்லெட்டுகளை அன்லாக் செய்யக் கூடிய பூட் லோடரைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. ஒரு சிலர் அதற்கான சாப்ட்வேரையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது டேப்லெட்டின் இயங்கு தளத்தைக் கண்டிப்பாக பாதிக்கும். அதனால் அப்படிப்பட்ட சாப்ட்வேரைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தற்போது ஆசஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. அதாவது ஆசஸ் தனது டேப்லெட் வாடிக்கையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமான அன்லாக்கிங் பூட்லோடர் சாப்ட்வேரை களமிறக்குகிறது. அதிலும் குறிப்பாக ஆசஸ் இஇஇ பேட் ட்ரான்பார்மர் டேப்லெட்டில் இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்த முடியும்.

அன்லாக் செய்யப்பட்ட டேப்லெட் எவ்வாறு செயல்படும் என்று பார்த்தோமானால் இந்த அன்லாக் சாப்ட்வேர் என்பது ஒரு கோட் அல்லது ஸ்கிரிப்ட் ஆகும். இந்த சாப்ட்வேர் இயங்குதளம் செயல்படுவதற்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிடும். எனவே அன்லாக் செய்யும் வசதி இருந்தால் கஸ்டம் பில்ட் ரோம் கெர்னல்கள் போன்றவற்றை இன்ஸ்டால் செய்வதன் மூலம் டேப்லெட்டை மாற்றி அமைக்க முடியும்.

அதுபோல் ப்ரோகிராமர்களிலும் இந்த பூட்லோடர் டூல் மூலம் ஒரு சில மாற்றங்களை எளிதாகக் கொண்டுவர முடியும். ஆனால் இந்த டூலைப் பயன்படுத்தும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்கெனவே இந்த டூலைப் பற்றி பேசிக் கொண்டிருந்த ஆசஸ் இப்போது வாடிக்கையாளர்கள் பயன் பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் இந்த சாப்ட்வேரோடு பல எச்சரிக்கைக் குறிப்புகளும் வருகின்றன. ஆகவே இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதன் முதலாக இந்த அன்லாக் சாப்ட்வேரை ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்ஜிஜ் இயங்கு தளத்தில் இயங்கும் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டில்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஆசஸ் கூறியிருக்கிறது. மேலும் இந்த சாப்ட்வேருக்கு உத்திரவாதமும் கிடையாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X