பரபரப்பை கூட்டிய புதிய ஆசஸ் டேப்லெட்!

ஆசஸின் புதிய ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் என்ற டேப்லெட்டைப் பற்றி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த புதிய டேப்லெட் உலக அளவில் 10க்கு 10 மதிப்பெண் பெற்று இருக்கிறது. அதற்கு காரணம் அதன் சூப்பர் ஐபிஎஸ் எல்சிடி கெப்பாசிட்டிவ் எச்டி ரிசலூசன் கொண்ட 10.1 இன்ச் தொடு திரையாகும்.
இந்த ஆசஸ் ப்ரைம் டேப்லெட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது என்விடியா டேக்ரா 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதன் ப்ராசஸரைப் பார்த்தால் அது க்வாட்கோர் 1.3 ஜிஹெர்ட்ஸ் எ9 ப்ராசஸர் ஆகும். அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இது யுஎல்பி ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டைக் கொண்டுள்ளது.
இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு ஆகும். அதாவது ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப் இயங்கு தளத்துடன் வருகிறது. மேலும் இதில் ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்யலாம்.
இந்த ப்ரைம் டேப்லெட்டின் கேமரா 8 மெகா பிக்சல் எல்இடி ப்ளாஷ் கொண்டதாகும். இந்த கேமரா முழு எச்டி 1080பி வீடியோ ரிக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும். அதோடு இதன் 1.2 மெகா பிக்சல் துணை கேமரா மூலம் வீடியோ கான்பரன்சிங் செய்ய முடியும்.
மேற்சொன்ன அத்தனை வசதிகளையும் இந்த ப்ரைம் டேப்லெட் கொண்டிருப்பதால் உலகின் தலை சிறந்த டேப்லெட் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மேலும் பலர் இதை விரும்பி வாங்குகின்றனர்.
இதின் முக்கிய திருப்பம் என்னவென்றால் இந்த ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட் சோனியின் ப்ளேஸ்டேசன் 3 டூவல் ஷாக் கண்ட்ரோலரை சப்போர் செய்யும் என்பதாகும். இந்த வசதியை இதற்கு முன் சோனி டேப்லட் எஸ் மட்டுமே சப்போர்ட் செய்து வந்தது.
தற்போது சுவீடனைச் சேர்ந்த சுவீடாய்டு என்ற வெப்சைட் ஆசஸ் ப்ரைம் டேப்லெட்டில் இந்த வசதியை பயன்படுத்தியதாக கூறியிருக்கிறது. மேலும் இந்த வசதியை சப்போர்ட் செய்வதற்காக இந்த டேப்லெட்டுக்கு துணை ட்ரைவர்கள் எதுவும் தேவையில்லை என்று இந்த வெப்சைட் கூறுகிறது. அதாவது யுஎஸ்பி போர்ட் மூலம் டூவல் ஷாக் கண்ட்ரோலரை இந்த ஆசஸ் டேப்லெட்டை இணைத்தால் போதும். அது தானாகவே சப்போர்ட் செய்யும்.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 டேப்லெட்டில் மிக எளிதாக இந்த கண்ட்ரோலரை வழங்கவில்லை. பிஎஸ்3 டூவல் ஷாக் கண்ட்ரோலரைப் பயன்படுத்தி சோனி டேப்லெட் எஸ்ஸில் பிஎஸ்3 வீடியோ கேம்களை விளையாட விரும்பினால் அதற்காகத் தனியாக ஒரு அடாப்டரை வாங்க வேண்டும்.
அதன் பிறகுதான் ப்ளூடூத் இணைப்பு மூலம் இந்த டூவல் ஷாக் கண்ட்ரோலரைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக வீடியோ கேம் பிரியர்களின் கட்டாயத் தேவையாக சோனி பிஎஸ்3 டேப்லெட் உள்ளது. தற்போது இந்த சோனி பிஎஸ்3 டேப்லெட்டுக்கு மாற்றாக ஆசஸ் ப்ரைம் டேப்லெட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ப்ளே ஸ்டேசன் 3 டூவல் ஷாக் கண்ட்ரோலரை வயர்லஸ் மூலமாகவே ஆசஸ் டேப்லெட்டில் இணைக்க முடியும் என்று சுவீட்ராய்டு இணைய தளம் கூறுகிறது. ஆனால் ஒரு சில கேம்களை இது சப்போர்ட் செய்யாது. அதற்காக யுஎஸ்பி இணைப்பைப் பயன்படுத்தினால் இந்த பிரச்சினை இருக்காது.
எனவே இந்த ப்ளேஷ்டேசனோடு சூப்பர்ஜிஎன்இஎஸ், எப்பிஎஸ்இ மற்றும் என்64ஒஐடி போன்றவற்றை யுஎஸ்பி மூலம் இணைத்தால் நேரம் போவது தெரியாமல் ஆசஸ் ப்ரைம் டேப்லெட்டில் வீடியோ கேமில் புகுந்து விளையாடலாம்


Click it and Unblock the Notifications