ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் ஓஎஸ்க்கு மாறும் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர்!

ஆசஸ் நிறுவனம் தனது ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை அப்டேட் செய்யப் போகிறது என்ற செய்தி கெட்ஜெட் உலகில் மிகப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வரும் 12ந்தேதி இந்த அப்டேட் செய்யும் வசதி துவங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகின்றது. இந்தச் செய்தியானது ஆசசின் வாடிக்கையாளர்களுக்கும் அதே போல் புதிதாக இந்த டேப்லெட்டை வாங்கப் போகிறவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி ஆகும்.
ஒரு உயர்தர டேப்லெட் இந்த ஐசிஎஸ் அப்டேட்டேப் பெறுவது முதல் முறையாகும். மேலும் ஆசஸ் ஒரு டூலை அறிமுகப்படுத்துகிறது. இந்த டூல் டேக்ரா 3 ப்ராசஸர் வழங்கும் பூட்லோடரை அன்லாக் செய்யும் சக்தி கொண்டது. அதுபோல் இது டிவைசில் உள்ள ரோம்களை கஸ்டம் செய்யும் திறனும் கொண்டது. ஆனால் இதன் பூட்லோடரை அன்லாக் செய்துவிட்டால் கொடுக்கப்பட்ட உத்திரவாதம் இல்லாமல் போய்விடும். அதனால் பூட்லோடரை அன்லாக் செய்யாமல் இந்த டேப்லெட்டில் புகுந்து விளையாடலாம்.
இந்த ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டில் உள்ள ஒரு சிறிய குறை என்னவென்றால் இதில் ஜிபிஎஸ் சிக்னல்களுக்கான முறையான லாக் இதில் கிடையாது. அவ்வாறு லாக் கிடைத்தாலும் நீண்ட நேரம் இந்த சிக்னல் ட்ராக்கை வைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் ஆசஸின் ஹார்ட்வேர் அவ்வாறு அமைந்திருக்கிறது. இந்த ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமின் மெட்டல் செல் ஜிபிஎஸ் சிக்னல்களைத் தடை செய்துவிடும். அதனால் ரிசப்சன் குறைவாக இருக்கும். ஆனால் இது ஒரு பெரிய குறைபாடு அல்ல.
ஏனெனில் மற்ற சிறப்பம்சங்கள் இந்த டிவைசில் மிக அபாரமாக உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த டேப்லெட்டில் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளமும் டேக்ரா 3 ப்ராசஸரும் இணைந்து வரும் போது இதன் செயல் திறன் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைமின் விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரூ.30,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications