Home
Computer

ஐபேட்-2வுடன் மல்லுக்கட்ட வரும் புதிய ஆசஸ் டேப்லெட்!

By Karthikeyan
ஐபேட்-2வுடன் மல்லுக்கட்ட வரும் புதிய ஆசஸ் டேப்லெட்!

ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் மற்றும் ஆப்பிள் ஐபேட்2 ஆகிய இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட்டுகள் ஆகும். ஆசஸ் இஇஇ பேட் ட்ரான்ஸ்பார்பர் டேப்லெட் தனது சிறப்பான ஹார்ட்வேர்கள் மற்றும் க்யுவெர்ட்டி பிசிக்கல் கீபோர்ட் மற்றும் மலிவு விலை போன்ற அம்சங்களால் பெரும்பாலான மக்களைக் கவர்ந்துவிட்டது. அதனால் இப்போது ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் என்ற மிகவும் மேம்படுத்தப்பட்ட புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது.

அதனால் இந்த ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் ஆப்பிளின் ஐபேட்2க்கு சரியான போட்டியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபேட்2ன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்றால் பல நிறுவனங்கள் ஆப்பிளின் ஐபேட்2 போன்ற டேப்லெட்டுகளைத் தயாரிக்க முனைப்போடு இருக்கின்றன. அந்த அளவிற்கு இந்த ஐபேட்2 சூப்பராக கொடிகட்டிப் பறக்கிறது.

இப்போது இந்த ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் மற்றும ஐபேட்2 ஆகிய இரண்டு டேப்லெட்டுகளின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அவை வியப்பில் ஆழ்த்திவிடும். அதாவது ப்ரைம் டேப்லெட் 9.7 இன்ச் அளவில் 768 x 1024 பிக்சல் ரிசலூசன் கொண்ட எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டு இருக்கிறது என்றால் ஐபேட்2 10.1 இன்ச் அளவில் 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட சூப்பர் ஐபிஎஸ்+ எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது.

அடுத்தாக கேமராவைப் பார்க்கும் போது ப்ரைம் டேப்லெட் 0.7எம்பி மற்றும் 960 x 720 பிக்சல் கொண்ட ரியர் கேமராவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் விஜிஎ முகப்புக் கேமராவும் இதில் உண்டு. இந்த கேமரா 720பி வீடியோவை சப்போர்ட் செய்யும். ஆனால் இதில் எல்இடி ப்ளாஸ் இல்லை.

ஆனால் ஜியோ டோக்கிங் உண்டு. அதே நேரத்தில் ஐபேட்2ல் ஆட்டோபோக்கஸ், எல்இடி ப்ளாஸ் மற்றும் 3264x2448 பிக்சல் கொண்ட 8எம்பி ரியர் கேமரா உள்ளது. அதுபோல் 1.2எம்பி முகப்பு கேமராவும் உண்டு. இந்த கேமரா 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும். இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளும் உண்டு.

சேமிப்பு வசதிகளைப் பார்த்தால் இரண்டு டேப்லெட்டுகளுமே கணக்கில்லாத போன்புக் மற்றும் கால் ரிக்கார்டுகளைக் கொண்டுள்ளன. ப்ரைம் டேப்லெட்டில் எக்ஸ்டர்னல் சேமிப்பு இல்லை. ஆனால் இதன் இன்டர்னல் சேமிப்பு 16/32/64 ஜிபி ஆகும். அதுபோல் இதில் கார்டு ஸ்லாட்டும் இல்லை. ஆனால் ஐபேட்2 எக்ஸ்டர்னல் சேமிப்பு மற்றும் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி வசதி கொண்டு 32ஜிபி அல்லது 64ஜிபி இன்ட்ர்னல் சேமிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் ரேமைப் பொருத்தவரை ப்ரைம் 512 எம்பியையும் ஐபேட்2 டேப்லெட் 1ஜிபியையும் கொண்டுள்ளன.

அடுத்ததாக தகவல்களை முறைப்படுத்த ப்ரைம் ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் 3ஜி எச்எஸ்டிபிஎ 850 / 900 / 1900 / 2100 போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐபேட்2ல் இத்தகைய வசதிகளைப் பார்க்க முடியாது. இரண்டு டேப்லெட்டுகளுமே வைபையைப் பொறுத்தவரை வைபை ஹாட்ஸ்பார் செயல்திறனுடன் கூடிய வைபை 802.11 எ/பி/ஜி கொண்டிருக்கின்றன. ப்ளூடூத்தைப் பொருத்தவரை ப்ரைம் எ2டிபி மற்றும் இடிஆர் வசதியுடன் கூடிய ப்ளூடூத் 2.1ஐ கொண்டிருக்கிறது. ஆனால் ஐபேட்2 எ2டிபி வசதியுடன் கூடிய ப்ளூடூத் 2.1ஐ கொண்டிருக்கிறது.

இரண்டுமே மைக்ரோயுஎஸ்பி கனெக்டருடன் கூடிய யுஎஸ்பி 2.0வைக் கொண்டுள்ளன. அதுபோல் இரண்டிலும் ஜிபிஎஸ் வசதியும் உண்டு. நெட்வொர்க சப்போர்ட்டைப் பார்த்தால் ப்ரைம் ஜிஎஸ்எம் 850 / 900 / 1800 / 1900 உடன் கூடிய 2ஜி நெட்வொர்க் மற்றும் எச்எஸ்டிபிஎ 850 / 900 / 1900 / 2100 உடன் கூடிய 3ஜி நெட்வொர்க் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டுமே ஆப்பிள் ஐபேட்2ல் இல்லை.

அதுபோல் பொழுதுபோக்கு வசதிகளுக்காக இரண்டுமே எம்பி3, டபுள்யுஎவி, டபுள்யுஎம்எ மற்றும் எஎசி பைல்களைக் கொண்டுள்ளன. இரண்டிலும் வீடியோப் ப்ளேயர் உண்டு. ஆனால் ஐபேட்2ல் கூடுதலாக எம்பி4, எச்.264/எச்.263 பைல் சப்போர்ட் போன்ற வசதிகளும் உள்ளன. இரண்டிலுமே கேம்கள் உள்ளன. ஆனால் இரண்டுமே எப்எம் ரேடியோவைக் கொண்டிருக்கவில்லை.

பேட்டரியைப் பொருத்தவரை ப்ரைம் லை-பிஒ 6930 மெகாஹர்ட்ஸ் கொண்ட ஸ்டேன்டர்டு பேட்டரியையும், ஐபேட்2 ஸ்டேன்ட்ர்டு பேட்டரியையும் கொண்டிருக்கின்றன. ப்ரைமின் ஸ்டேண்ட்பை நேரம் 720 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில் ஐபேட்2ன் ஸ்டேண்ட்பை நேரம் 900 மணி நேரம் ஆகும். அதுபோல் ப்ரைம் 10 மணி நேர இயங்கு நேரத்தையும் அதே நேரத்தில் ஐபேட்2 12 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டுள்ளன.

ப்ரைமின் மொத்த பரப்பு 241.2 x 185.7 x 8.8 மிமீ ஆகும். அதே நேரத்தில் ஐபேட்2ன் தடிமன் 8.3மிமீ ஆகும். அதுபோல் ப்ரைம் டேப்லெட் 607 கிராம் எடையையும் ஐபேட்2 586 கிராம் எடையையும் கொண்டுள்ளன. இயங்குதளத்தைப் பொருத்தவரை ப்ரைம் டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் 4 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. இதை 5ற்கு அப்க்ரேட் செய்ய முடியும்.

அதே நேரத்தில் ஐபேட்2 ஆன்ட்ராய்டு வி3.2 ஹன்கோம்ப் இங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. இதை வி4.0ற்கு அப்க்ரேட் செய்ய முடியும். ஜிபியுவைப் பொருத்தவரை ப்ரைம் பவர்விஆர் எஸ்ஜிஎக்ஸ்543எம்பி2வையும், அதே நேரத்தில் ஐபேட்2 யுஎல்பி ஜிஇபோர்ஸையும் கொண்டிருக்கின்றன. ப்ரைம் டூவர் கோர் 1 ஜிஹர்ட்ஸ் கோர்டெக்ஸ்-எ9 ப்ராசஸரையும் அதே நேரத்தில் ஐபேட்2 க்வாட்-கோர் 1.3 ஜிஹெர்ட்ஸ் கேர்டெக்ஸ்-எ9 ப்ராசஸரையும் கொண்டுள்ளன.

விலையைப் பொருத்தமட்டில் ஐபேட்2 ரூ.32,000ற்கும் ப்ரைம் டேப்லெட் ரூ.35,000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X