Home
Computer

விரைவில் வரும் ஆசஸ், ஏசர் டேப்லெட்டுகள் முன்னோட்டம்!

By Super

விரைவில் வரும் ஆசஸ், ஏசர் டேப்லெட்டுகள் முன்னோட்டம்!
மார்க்கெட்டுக்கு விரைவில் வரும் ஆசஸ் டிரான்பார்மர் ப்ரைம் மற்றும் ஏசர் ஐகோனியா ஏ-200 ஆகிய டேப்லெட்டுகள் பற்றிய சிறப்பு அம்சங்கள் முன்னோட்டத்தை காணலாம்.

ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட். இது ஏற்கனவே சரித்திரம் படைத்த டேப்லெட். எனவே, இதைத்தொடர்ந்து வரும் புதிய ஆசஸ் டிரான்ஸ்பார்மர் ப்ரைம் அதைவிட அசத்தலாக இருக்கும் என நம்பலாம். வரும் 16ம் தேதி இந்த டேப்லெட் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏசர் ஐகோனியா டேப் ஏ200ன் அறிமுகத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆசஸ் ட்ரான்பார்மர் ப்ரைமின் தோற்றம் சூப்பராக இருக்கிறது. இதன் கீபோர்டை தனியாக பிரிக்க முடியும். மேலும் இது ஒரு மெல்லிய டேப்லெட் ஆகும். இதன் தடிமன் 8.35மிமீ மட்டுமே. அதாவது இது ஐபேட் 2ஐ விட மெல்லியதாகும்.

ஏசர் ஐகோனியா டேப் ஏ200 பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இது மெட்டாலிக் சிவப்பு மற்றும் கருப்பு டைட்டானியம் போன்ற நிறங்களில் வருகிறது. ஏ500 டேப்லெட்டின் அப்டேட்டாக இந்த ஏ200 வருகிறது. இதன் மொத்த எடை 1.5 பவுண்டு மட்டுமே.

ஆசஸ் ட்ரான்பார்மர் ப்ரைம் மினி எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டிருக்கிறது. மேலும் இதில் வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதிகளும் உண்டு. அதுபோல் 3ஜி வசதிகளும் இதில் இருக்கும் என நம்பலாம்.

ஏசர் ஐகோனியா டேப் ஏ200 யுஎஸ்பி போர்ட்டுடன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டிருக்கும். மேலும் இது வெப்காமை கொண்டிருப்பதால் ஆன்லைன் சேட்டிங்கிற்கு வசதியாக இருக்கும்.

ஆசஸ் டிரான்பார்மர் ப்ரைம் என்விடியா டேக்ரா 3 பிராசஸரைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே போல் ஏசர் ஐகோனியா டேப் எ200 என்விடியா டேக்ரா 2 பிராசஸரைக் கொண்டிருக்கும் என நம்பலாம். டேக்ரா 3 குறைந்த மின் திறனில் 2 ஜி ஹெர்ட்ஸ் அளவு செயல்திறனை வழங்கும். ப்ரைம் 1ஜிபி ரேமுடன் 16ஜிபி இன்டர்னல் சேமிப்பைக் கொண்டிருக்கிறது. அதுபோல் எ200ம் 1 ஜிபி ரேமைக் கொண்டுள்ளது.

ட்ரான்பார்மர் ப்ரைம் 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 10.1 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதுபோல் எ200ன் டிஸ்ப்ளேயும் 1280 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கும்.

ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் கூகுள் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சேன்ட்விச் இயங்கு தளத்தில் இயங்கும். அதே நேரத்தில் ஏ200 ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்கும்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே அசத்தலாக இருந்தாலும் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் இன்னும் அதிக அம்சங்களுடன் வருகிறது. 500ஜிபி கொண்ட ப்ரைம் டேப்லெட்டின் விலை ரூ.25,000மாக இருக்கும். அதுபோல் ஜனவரி 2012ல் எ200 சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதன் விலை ப்ரைமை விட சற்று குறைவாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X