Home
Computer

ஜெல்லி பீன் அப்டேட் பெறும் ஆசஸ் லேப்டாப்புகள்!

By Karthikeyan
ஜெல்லி பீன் அப்டேட் பெறும் ஆசஸ் லேப்டாப்புகள்!

ஆன்ட்ராய்டு வரிசையில் புதிய ஜெல்லி பீன் இயங்குதளம் தற்போது கணினித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த புதிய ஜெல்லி பீன் இயங்கு தளம் வந்த பிறகு பல நிறுவனங்கள் தனது மொபைல்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்புகள் மற்றும் கணினிகளில் இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்து வருகின்றன.

அந்த வகையி்ல ஆசஸ் நிறுவனமும் தனது ட்ரான்ஸ்பார்மர் மாடல்களான டிஎப்300 மற்றும் டிஎப்700 ஆகிய லேப்டாப்புகளுக்கு இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது. ஏற்கனவே பிரபலமாக உள்ள இந்த லேப்டாப்புகளில் இந்த புதிய இயங்கு தளம் அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விற்பனைப் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய இயங்கு தளம் இந்த லேப்டாப்புகளுக்கு பல நவீன தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும் என்று நம்பலாம்.

இந்த அப்டேட்டை எப்போது ஆசஸ் செய்ய இருக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த அப்டேட் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎப்300 மற்றும் டிஎப்700 ஆகிய லேப்டாப்புகள் தற்போது ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கி வருகின்றன. இந்த புதிய ஜெல்லி பீன் இயங்கு தளத்தை இந்த லேப்டாப்புகளில் அப்டேட் செய்வதன் மூலம் இந்த லேப்டாப்புகளில் உள்ள ஒரு சில குறைபாடுகள் களையப்படும்.

குறிப்பாக கேமரா வசதி மேம்படுத்தப்படும். அதோடு இந்த லேப்டாப்புகளின் வேகமும் பல மடங்கு அதிகரிக்கும். மேலும் ஆப்லைன் வாய்ஸ் டைப்பிங் பங்சனாலிட்டி போன்ற புதிய தொழில் நுட்பமும் இந்த லேப்டாப்புகளில் அப்டேட் செய்யப்படும். மொத்தத்தில் இந்த புதிய அப்டேட் இந்த ட்ரான்ஸ்பார்மர் லேப்டாப்புகளை மெருகேற்றும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X