சர்வதேச தரச் சான்றிதழுடன் வரும் புதிய ஆசஸ் டேப்லட்

குறிப்பாக யூபிகுயிட்டோஸ் டெஸ்க்டாப் கனிணிகளிலிருந்து பாம்டாப்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வரை கம்ப்யூட்டிங்கில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. மதர் போர்டுகளைத் தயாரிக்கும் ஆசஸ் நிறுவனம் புதிய கம்ப்யூட்டிங் கொண்ட நோட்புக்குகள் மற்றும் டேப்லட்டுகளையும் களமிறக்குகிறது.
புதியதாக வரும் எந்த படைப்புமே நமது எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அந்த விதத்தில் புதிய லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் அவை நமது ஆவலை அதிகரிக்கின்றன. அதுபோல் அவை எப்போது வரும் மற்றும் அவை எல்லா நாடுகளுக்கும் வருமா என்ற ஆவல் அதிகமாகவே இருக்கும்.
குறிப்பாக ஆப்பிள், சாம்சங், தோஷிபா, எல்ஜி, சோனி, போன்ற நிறவனங்களின் புதிய படைப்புகளுக்கு நாம் உறுதியான உத்திரவாதம் தரமுடியும். ஏனெனில் அவை அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
அதுபோல் பரிச்சமில்லாத நிறுவனங்களின் புதிய படைப்புகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஏற்கனெவே மக்களின் ஆதரவைப் பெற்ற ஆசஸ் நிறுவனம் புதியதாக ஆசஸ் டப் இடிபிடபள்யு11எஎ என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய இடிபிடபள்யு11எஎ டேப்லட் முதலில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்படும். இந்த டேப்லட் 7 இன்ச் அளவு திரை கொண்டு மல்டி டச் வசதி கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இது கூகுள் ஆன்ட்ராய்டு 3.2.1 இயங்குதளத்தில் இயங்குகிறது.
இதன் பிராசஸரைப் பார்த்தால் அது ட்வின் கோர்ட்டெக்ஸ்-எ9 கோர் 1ஜிஹெர்ட்ஸ் என்விடியை டேக்ரா 2 ஜிப்செட் ஆகும். மேலும் இது ஐபி54 தரச் சான்றிதழ் பெற்று வருகிறது. அதனால் இதை 73செமீ உயரத்தில இருந்து கீழே போட்டாலும் இதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுபோல் இதில் நீர் தடுப்பு வசதியும் உள்ளது.
இடிபிடபள்யு11எஎ டேப்லட் ஆட்டோ போக்கஸ் மற்றும் 1எக்ஸ் ஆப்டிக்கல் சூம் கொண்ட 5 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இதன் ரோம் 14.9ஜிபி சக்தியையும் அதே நேரத்தில் இதந் சேமிப்பு வசதி 16ஜிபி ஆகும். மேலும் மைக்ரோ எஸ்டிசி, மைக்ரோ எஸ்டி மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் போன்ற ஸ்டாட்டுகள் மூலம் இதன் சேமிப்பை விரிவுபடுத்த முடியும்.
மேலும் சேட்டிலைட் நேவிகேசனுக்காக இது ஜிபிஎஸ் மற்றும் ஜியோடேக்கிங் சேவைகளை வழங்குகிறது. இந்த டேப்லட்டின் மொத்த பரப்பு 215 x 132 x 22.2மிமீ ஆகும். இதன் எடை 620 கிராம் ஆகும். மேலும் இது வைமேக்ஸ் ரேடியோ இணைப்பு கொண்டுண் வருகிறது. இதன் பேட்டரி 7500எம்எஎச் மின் திறன் கொண்டிருக்கிறது.
இடிபிடபள்யு11எஎ டேப்லட் இந்த நவம்பரில் ஜப்பானில் கேடிடிஐ நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. விரைவி்ல் இந்தியாவிற்கு வரும் என நம்பலாம். ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications