தீபாவளி பரிசாக நவம்பரில் நெக்சஸ் 7 டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்கும் ஆசஸ்

தீபாவளி பரிசாக நவம்பரில் நெக்சஸ் 7 டேப்லெட்டை இந்தியாவில் களமிறக்கும் ஆசஸ்
கூகுளின் தயாரிப்பான நெக்சஸ் 7 டேப்லெட்டை ஆசஸ் நிறுவனம் வரும் நவம்பரில் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த தகவலை பெங்களூடரில் நேற்று நடந்த ஆசஸ் பேட்போன் அறிமுக விழாவில் ஆசஸி தலைமை அதிகாரி ராஜூ தெரிவத்திருக்கிறார்.
மேலும் இந்த டேப்லெட்டின் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும். இந்த டேப்லெட் முதலில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதலில் களமிறக்கப்பட்டது. இந்த டேப்லெட் விற்பனையில் நல்ல வெற்றியைக் குவித்ததால் ஆசஸ் இந்த டேப்லெட்டை பிரானஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ததது.
வரும் நவம்பரில் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இந் தடேப்லெட் விற்பனைக்கு வந்தது. ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் 8ஜிபி நெக்சஸ் டேப்லெட் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி டேப்லெட் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கபடுகிறது.
மேலும் இந்த டேப்லெட் 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1ஜிபி ரேம், 1.3 ஜிஹெர்ட்ஸ் க்வாட் கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. தீபாவளி விழாவை ஒட்டி இந்த டேப்லெட் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications