அசத்தலான அம்சங்களுடன் புதிய ஆசஸ் டேப்லெட்!

ஆசஸ் நிறுவனம் சமீபத்தில் ஆசஸ் டேப்லெட் 600 என்ற ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த டேப்லெட் என்விடியாவின் 4ஜி எல்டிஇ ரேடியோ பேஸ் பேண்ட் பிராசஸருடன் வருகிறது.
அதாவது இந்த ஆசஸின் புதிய டேப்லெட்டுதான் என்விடியாவின் 4ஜி எல்டிஇ ரேடியோ பேஸ்பேண்ட் பிராசஸருடன் வரும் உலகின் முதல் டேப்லெட் ஆகும். அதோடு இந்த டேப்லெட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 10.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரை துல்லியமாக இருக்கிறது.
எனவே இந்த டேப்லெட்டில் சூப்பராக வீடியோ காட்சிகளைப் பார்த்து மகிழலாம். மேலும் இந்த திரை ஆம்பியன் லைட், கம்பாஸ், மேக்னட்டோ மீட்டர், ஜிரோஸ்கோப் மற்றும் அக்சிலரோ மீட்டர் போன்ற வசதிகளையும் வழங்குகிறது.
இந்த ஆசஸ் டேப்லெட் க்வாட் கோர் டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் இயங்கும் வேகம் தாறுமாறாக இருக்கும். அதோடு இதன் 2ஜிபி ரேம் இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கும். இணைப்பு வசதிக்காக இந்த டேப்லெட் யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆகிய தொழில் நுட்பங்களை வழங்குகிறது.
கேமாரவைப் பொறுத்த மட்டில் இந்த டேப்லெட் எல்இடி மற்றும் ஆட்டோ போக்கஸ் வசதியுடன் கூடிய 8எம்பி பின்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 2எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது. இதில் என்எப்சி வசதி உள்ளதால் இந்த டேப்லெட்டில் டிஜிட்டல் கம்யூனிக்கேசனை சூப்பராகச் செய்ய முடியும்.
இந்த புதிய ஆசஸ் டேப்லெட் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் விலை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications