அசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சிறந்த தேர்வு

By

  ROG ஸ்ட்ரீக்ஸ் கொண்ட இடைத்தர கேமிங் லேப்டாப்களை, அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் மற்றும் ஹீரோ லேப்டாப்களை இந்நிறுவனம் வெளியிட்ட நிலையில், அது 15 இன்ச் மாடல்களின் வடிவமைப்பு, ஸ்கிரின் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருந்தது.

  அசுஸ் ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II: கேம் விரும்பிகளின் சிறந்த தேர்வு

  FPS கேம்களுக்காக ஸ்காரும், MOBA வடிவிலான கேம்களுக்காக ஹீரோவும் வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில் புதிய ROG ஸ்ட்ரீக்ஸ் ஸ்கார் II GL504GS அதை ஒத்ததாக இருந்தாலும், வடிவமைப்பு துறையில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளது. அதைக் குறித்து காண்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வடிவமைப்பு

  ஸ்கார் II சதுர வடிவில் அமைந்து, பிரஷ் போன்ற முனைகளைப் பெற்றுள்ளது. சிறிய புட்பிரிண்டு மற்றும் குறுகலான பேசில்கள் இருப்பது அதிக கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் வழக்கமான மாதிரியில் பெரிய வித்தியாசத்தை காண முடியவில்லை.

  கடினமான தாடை பேசில் இருந்து பயனர்களின் பார்வைக்கு ஏற்ப அதிக சுமூகமான நிலைக்கு டிஸ்ப்ளேயை உயர்த்த முடிகிறது. தாடையின் வலது ஓரத்தில் வெப்கேமரா காணப்படுவது தொல்லையாக தெரிகிறது. இதை நடுவில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  பெரும்பாலான கேமிங் லேப்டாப்களின் அடித்தளத்தில் கட்டுமான பிரச்சனைகள் வருவது போல, ஸ்கார் II இல் இல்லை. இதன் அடித்தளம் உறுதியாகவும், கீப்போர்டு, கீபேடு, லிட் ஆகியவை நெகிழ்வு தன்மையோடும் உள்ளது.

  ஒரு உன்னதமான கேமிங் அனுபவத்தை பெற உள்ளங்கை வைக்க ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் பிரிண்ட் மற்றும் ஒரு தனித்துவமான லிட் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளங்கை வைக்கும் இடத்தில் கைவிரல் பாதிப்பை தவிர்க்கும் (ஆன்டி-ஃபிங்கர்பிரிண்டு) கோட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கீபோர்டில் வெள்ளை நிறத்திலான WASD கீக்கள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான FPS கேம்களுக்கு பயன்படுகின்றன.

  இந்த லேப்டாப்பில் RGB கீபோர்டு லைட்டிங் இருப்பதோடு, அடியில் உள்ள லிப் RGB லைட் ஸ்ட்ரீப் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. லிட்டில் அணைக்க கூடிய ஒரு ROG லோகோ அமைந்துள்ளது.

  டிஸ்ப்ளே

  AU அப்ட்ரோனிக்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்ட 15.6 இன்ச் IPS FHD டிஸ்ப்ளே-யை ஸ்கார் II பெற்றுள்ளது. மேலும் இதற்கு 144Hz ரீஃபிரஷ் விகிதமும் காணப்படுகிறது. இதில் 75 சதவீதம் அடோப் RGB காமுட் நிறைந்ததாக இருந்தாலும், அனுதின பயன்பாட்டிற்கு கச்சிதமான டிஸ்ப்ளே ஆகவும், மல்டிமீடியா பயன்பாடு மற்றும் குறிப்பாக கேமிங் ஆகியவற்றிற்கு ஏற்றதாக உள்ளது.

  ஆனால் G-சிந்தனிக் (நவிடியாவின் ஆன்டி- ஸ்கிரீன் டியரிங் டெக்னாலஜி) இதில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த இழப்பை GTX 1060 GPU சிறந்த வேகம் ஈடுகட்டுகிறது. இந்த வித்தியாசத்தை மிக அரிதாக மட்டுமே அறிய முடிகிறது என்பதால், ஒரு சிறப்பான மற்றும் கச்சிதமான கேமிங் அனுபவத்தை பெற முடிகிறது.

  ஆடியோ

  ஸ்கார் II ஆடியோ தரம் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது. இதில் வெளிவரும் ஆழமான மற்றும் அடர்ந்த பாஸ் ஆடியோ, மல்டிமீடியா மற்றும் கேமிங்கிற்கு சிறப்பாக இருப்பதால், வெளிப்புற ஆடியோ சாதனங்கள் எதுவும் தேவைப்படுவது இல்லை.

  இதில் சோனிக் ரேடர் III உட்படுத்தி இருப்பதால், கேமிங்கின் போது ஒரு ரேடர் அனுபவம் பெறலாம். அதன்மூலம் எதிரியின் துப்பாக்கி சூடு அல்லது நடை சத்தம் ஆகியவற்றின் சத்தம் தெள்ளத் தெளிவாக பெற முடிகிறது. 5.1 சேனல் ஆடியோவை ஆதரிக்கும் கேம் ஆக இருந்தால், கேம்மில் உள்ள ஒலியின் தூரத்தை மேற்கூறிய சாஃப்ட்வேர் அளவிடுகிறது.

  கீப்போர்டு மற்றும் டச்பேட்

  இதன் கீப்போர்டு உறுதியாகவும் 1.8mm நீளத்தையும் கொண்டது. இதிலேயே ஒலி கட்டுப்பாடு, ROG கேமிங் சென்டர், மைக் ஒலியை மட்டுபடுத்துவது ஆகிய கீக்களை பெற்றுள்ளது.

  WASD கீ வரிசை வெளிப்படையான கீகேப்களை கொண்டு, அது FPS கேம்களுக்காக என்பதை உணர்த்துகின்றன. அதே நேரத்தில் ROG Hero II இல் உள்ள QWER கீக்கள், MOBA தொடர்புடைய கேம்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்கார் II இல் விண்டோஸ் பிரிஸிஷன் டச்பேட் பயன்படுத்தப்படுகிறது. இது துல்லியமாகவும் கச்சிதமாகவும் அமைந்துள்ளது.

  கேமிங் சென்டர்

  இந்த ROG கேமிங் சென்டர் என்பது லேப்டாப்பின் டேஸ்போர்டு போல, விரிவான அமைப்பு தகவல், CPU மற்றும் GPU கிளாக் ஸ்பீடு, காலநிலை மற்றும் நினைவகம் என்று உள்ளது. இதில் கட்டமைப்பு தகவல்களும் நினைவக தேர்வுமுறை செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. டேஷ்போர்டின் கீழே ROG அயூரா கீபோர்டு லைட்டிங் கன்ட்ரோல், GPU மோடு சுவிட்சிங், ஃபேன் ஓவர்பூஸ்ட் ஃபேன் மோடு தேர்வுகள், கேம்விஷ்வல் டிஸ்ப்ளே மோடு கன்ட்ரோல், கேம் முதல் V நெட்வர்க் மேம்பாடுதல், சோனிக் ஸ்டூடியோ III ஒலி கூட்டி மற்றும் சோனி ரேடார் III ஆடியோ காட்சிப்படுத்துதல் போன்ற ROG அப்ளிகேஷன்கள் மற்றும் செயல்பாடுகளைப் பெற்றுள்ளது.


  கேம்விஷ்வலில் FPS, RTS/RPG, sRGB, ரேஸிங், சினிமா மற்றும் இயற்கை காட்சி போன்ற 6 முன்னோடி மோடுகள் உள்ளன.

  செயல்பாடு

  ஸ்கார் II கேம் ஆடுவது ஒரு இனிதான அனுபவத்தை அளிக்கிறது. பிரபலமான FPS கேம்கள் மட்டுமின்றி, மற்ற கிராஃபிக்ஸ் கேம்களிலும் இது சாத்தியப்படுகிறது. ஒற்றை கோர் செயல்பாடு என்று வரும் போது, 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் i7 8750H சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறது. இது கேமிங் மற்றும் பணி தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

  கேமிங் தவிர, மற்ற செயல்பாடுகளையும் செய்யும் போது, இந்த லேப்டாப்பில் அதிக சத்தம் வருவதில்லை. பன்முக வெப்ப-குழாய் வடிவமைப்பு மற்றும் சிறப்பான தூசி எதிர்ப்பு பள்ளங்கள் (ஆன்டி -டஸ்ட் டெனல்ஸ்) மூலம் குளிர்விப்பு அமைப்பின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. மேலும் பேன் வேகத்தை பயனர்கள் கட்டுப்படுத்தலாம் என்பதால், GPU செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதில் அமைதி, நடுத்தரம் மற்றும் அதிவேகம் என்ற மூன்று முறைகள் உள்ளது.

  லேப்டாப் வெப்பத்தை உள்ளே உள்ள ஃபேன் வெளியேற்றினாலும், பயனர்களின் உள்ளங்கை வைக்கும் இடம் சூடாகி எந்தொரு அசவுகரியத்தையும் ஏற்படுத்துவது இல்லை.

  ROG ஸ்ட்ரிக்ஸ் ஸ்கார் II இல் ரேஞ்சுபூஸ்ட் ஜீரோ பிளைடு ஸ்பாட் தொழில்நுட்பம் காணப்படுகிறது. 4 ஆன்டீனா கட்டமைப்பு மூலம் 2x2 + 2x2 இணைப்பு மோடு மூலம் சிக்னல் உறுதியை பொறுத்து, முக்கியமான மற்றும் aux ஆன்டீனா இடைப்பட்ட நிலையில் அமைகிறது.

  இதன் பேட்டரியைப் பொறுத்த வரை, பிற லேப்டாப்களை வைத்து பார்க்கும் போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதிக எடைக் கொண்டது.

  முடிவு

  இந்த கேமிங் சாதனத்தை வெறுக்கும் வகையில், எதுவும் இல்லை எனலாம். ஆனால் வெப்காமிரா இருப்பிடம், தண்டர்போல்ட் 3 இல்லாதது, கவர்ச்சியான உருவமைப்பு இல்லாதது ஆகியவை தான் உறுத்துகின்றன. இது போன்ற சில தடைகளை கடந்தால், ரூ.1,79,990 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கக் கூடிய நடுத்தர கேமிங் லேப்டாப் எனலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Asus ROG Strix Scar II review A scar every gamer would love: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more