அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

|

ஒரு புதிய ஆர்ஓஜி சீரிஸ் கேமிங் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை அசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏஎம்டி-யின் எட்டு-கோர் ரைசன் 1700 செயலி மூலம் இயக்கப்படும் தொழில்துறையின் கேமிங்கிற்கான முதல் மற்றும் புதிய லேப்டாப்பின் வெளியீடு குறித்து தைவானை சேர்ந்த இந்நிறுவனத்தின் கூறி வருகிறது.

அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிம

அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேமிங் லேப்டாப், தற்போது ஃபிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்வது துவங்கி உள்ளது. இந்த மாதம் (மார்ச்) 20 ஆம் தேதி முதல் இந்த லேப்டாப் வெளியிடப்படும். இதற்கு ரூ.1,34,990 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டை குறித்து அசஸ் இந்தியா நிறுவனத்தின் தேசிய வணிக மேம்பாட்டு மேலாளர் (பிசி மற்றும் கேமிங்) அர்னால்டு சூ கூறுகையில், "ஏஎம்டி ரைசன் உடன் கூடிய ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி, கேமிங் ஹார்டுவேரை சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது.

ஏஎம்டி உடன் கைகோர்த்து, ஒரு மென்மையான மற்றும் ஒளிவு மறைவு இல்லாத இலவச கேமிங் அனுபவத்தை அளிக்கக்கூடிய, உலகின் முதல் மற்றும் அதிக சக்திவாய்ந்த 8 கோர் ஏஎம்டி அடிப்படையில் அமைந்த கேமிங் இயந்திரத்தை தயாரித்து வெளியிடுவதில், நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

இந்த புதிய லேப்டாப் மூலம் சிறந்த கேமிங் செயல்பாட்டை அளிக்க முடியும் என்று இந்நிறுவனம் உறுதி அளித்துள்ள நிலையில், இதில் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ள அம்சங்களைக் குறித்த ஒரு கண்ணோட்டத்தைக் காண்போம்.

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி லேப்டாப், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சந்தையில் ஏற்கனவே உள்ள கேமிங் லேப்டாப்களின் பட்டியலில் இணைந்து உள்ள இதில், ஒரு 17.3 இன்ச் முழு ஹெச்டி ஐபிஎஸ் கண்களைக் கூசாத டிஸ்ப்ளே உடன் கூடிய ராடியான் ஃப்ரீசென்க் ஆதரவை கொண்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் வழக்கமான முறை, விவிட் முறை, கண் பாதுகாப்பு முறை மற்றும் கைமுறையான முறை என்ற நான்கு டிஸ்ப்ளே முறைகளில், ஒரே ஒரு கிளிக் மூலம் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.

அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி-யில் காணப்படும் ஒரு பேக்லிட் கீபோர்டை குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ஒரே நேரத்தில் 30 கீக்களை அழுத்தினால் கூட, அதை சரியான முறையில் கிரகித்து கொண்டு கீ பயன்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு ஆன்டி-கோஸ்டிங் தொழில்நுட்பம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த லேப்டாப்பில் ஒரு திறமை வாய்ந்த வெப்ப கடத்தி வடிவமைப்பு தொடர்பான அம்சமும் காணப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுவதாவது, "இதில் உள்ள ஹைப்பர் கூல் டியோ-காப்பர் கூலிங் அமைப்பானது, சிபியூ மற்றும் ஜிபியூ ஆகியவற்றை தனித்தனியாக குளுமைப்படுத்தும் வகையில், வெப்ப குழாய்கள் மற்றும் ஒரு இரட்டை ஃபேன் அமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பின் மூலம் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி லேப்டாப் நீண்டநேரம் பயன்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், தேவையான குளிர்ச்சியை திறம்பட அளிக்கிறது" என்கிறது.

இந்த லேப்டாப்பில் இணைப்பு தேர்வுகளைப் பொறுத்த வரை, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 4.1, யூஎஸ்பி வகை-சி, யூஎஸ்பி 3.0, ஹெச்டிஎம்ஐ 2.0, 3.5மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. அதன் அளவீடுகளைப் பொறுத்த வரை, 415x280x340மிமீ என்ற அளவிலும், 3.2 கிலோ (பேட்டரி உடன்) எடையிலும் காணப்படுகிறது.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

இந்த லேப்டாப்பிற்கு ஆற்றலை அளிக்க, ரைசன் 7 1700 செயலி (எட்டு கோர்ஸ், 16 திரெட்ஸ்), ஏஎம்டி ராடியோன் ஆர்எக்ஸ்580 கிராஃபிக்ஸ் (விஆர்ஏஎம் இல் 4 ஜிபி) மற்றும் டிடிஆர்4 நினைவகத்தில் 16 ஜிபி (32 ஜிபி வரை விரிவுப்படுத்த முடியும்) காணப்படுகிறது. இந்த சாதனத்தில் 256ஜிபி எஸ்ஏடிஏ எஸ்எஸ்டி மற்றும் ஒரு 1டிபி ஹெச்டிடி அளிக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் ஒரு 4 செல் 76 டபில்யூஹெச்ஆர்எஸ் பாலிமர் பேட்டரி காணப்படுகிறது.

இந்த லேப்டாப்பில் உள்ள ஏஎம்டி ராடியோன் ஜிபியூ, வேகத்தை அதிகரித்து, திறமை வாய்ந்த விரிச்சுவல் ரியாலிட்டி செயல்பாட்டை அளிப்பத்தால், பயனருக்கு மென்மையான செயல்பாடு, குறைந்த செயலற்ற நிலை மற்றும் திணறல் இல்லாத விஆர் அனுபவங்களைப் பெற முடிகிறது.

ஆர்ஓஜி கேமிங் சென்டர்

ஆர்ஓஜி கேமிங் சென்டர்

ஆர்ஓஜி அப்ளிகேஷன்களை எளிதாக அறிமுகம் செய்யவும் அமைப்புகள் மெனுவை அணுகவும் உதவும் ஒரு டேஸ்போர்டான ஆர்ஓஜி கேமிங் சென்டரை, அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி பெற்றுள்ளது. ஆர்ஓஜி கேம்ஃபஸ்ட் IV, எக்ஸ்ஸ்பிலிட் கேம்கேஸ்டர் மற்றும் அசஸ் ஸ்பிலிடிட் விஷவல் டெக்னாலஜி உள்ளிட்ட ஒருங்கிணைந்த அப்ளிகேஷன்களை செயல்படுத்தும் வகையில் இந்த டேஸ்போர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேம் பிரியர்களுக்கு ஒரு அருமையான வரப்பிரசாதம்.!கேம் பிரியர்களுக்கு ஒரு அருமையான வரப்பிரசாதம்.!

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ஆடியோ

ஆடியோ

அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி-யில் சோனிக் ஸ்டூடியோ மற்றும் சோனிக் ரேடார் ஆடியோ தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டு, அதிவேக கேமிங் ஆடியோவை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், சோனிக் ஸ்டூடியோ மூலம் இன் -கேமிங் ஆடியோவில் உயர் தரம் கிடைப்பதோடு, ஸ்ட்ரீம்மிங் மேம்பட்டு, சிறப்பான வாய்ஸ் பிக்அப் மற்றும் ஒலித் தொல்லை குறைப்பு ஆகியவை உடன் கூடிய ஆடியோ ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. இந்த சோனிக் ரேடாரின் உதவியால், பயனரின் போட்டியாளரின் அசைவுகளைக் கண்டறியும் வகையில், ஒரு ஆன்-ஸ்கிரீன் ஓவர்லே மூலம் கன்ஷூட்ஸ் சாதகமான நிலை, கால்தடங்கள் மற்றும் மற்ற பல இன்-கேம் ஒலி விளைவுகளைக் காட்டுகிறது.

மேலும் இந்த லேப்டாப்பில், தேவையில்லாத சத்தங்களை வடிகட்டும் வகையில் வரிசையான மைக்ரோபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பயனரின் பேச்சு சத்தம் தெளிவாகவும் சத்தமாக கேட்க முடியும். அதாவது, ஒரு எல்ஏஎன் பார்ட்டி அல்லது மற்றொரு சத்தம் மிகுந்த சூழ்நிலையில் பயனர் இருந்தால் கூட, அவரது பேச்சு சத்தம் மட்டும் தெளிவாகவும் சத்தமாகவும் கேட்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus has now announced the launch of a new ROG series gaming laptop ROG Strix GL702ZC, in India. The Taiwanese company is touting the new laptop to be the industry's first gaming laptop powered by AMD's eight-core Ryzen 1700 processor. The laptop is available via Flipkart for pre-order. The laptop will be released starting March 20 and is priced at Rs. 1,34,990.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X